2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டியில் இலங்கை வங்கியின் ‘BOC DIGI’ சேவை நிலையம்

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கி, தனது செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு அங்கமாக, கண்டி சிட்டி சென்ரரில் தனது ‘BOC DIGI’ சேவை நிலையத்தை அண்மையில் திறந்துள்ளது.  

நவீன வசதிகள் படைத்த சொப்பிங் தொகுதியான கண்டி சிட்டி சென்ரரில் இது அமைந்துள்ளதுடன், இந்தப் புதிய BOC DIGI இனால் வாடிக்கையாளர்களுக்கு பரிபூரண டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதுடன், பெருமளவான தன்னியக்க மற்றும் சுய-சேவைப் பகுதிகளையும் கொண்டுள்ளது.  

BOC DIGI நிலையம், இலங்கை வங்கியின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேரா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் டி.எம்.குணசேகர மற்றும் கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் இலங்கை வங்கியின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கிளையின் கணக்கு வைத்திருப்போர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.  

இந்த மைல்கல் நிகழ்வு தொடர்பில் இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “எமது டிஜிட்டல் மயமாக்கத்தை நோக்கிப் பயணிக்கும் தருணத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கும் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள டிஜிட்டல் சேவைகளை பெருமளவு எதிர்பார்க்கின்றனர். BOC DIGI அங்குரார்ப்பணத்துடன் புத்தாக்கத்தை நோக்கிய இலங்கை வங்கியின் அர்ப்பணிப்பு என்பது முன்நோக்கிப் பயணித்துள்ளதுடன், தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வழிகோலியுள்ளது” என்றார்.  

BOC DIGI இனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, அதனூடாக வங்கியியல் நடவடிக்கைகளுக்கு புதிய அனுபவம் சேர்க்கப்படுவதுடன், வங்கியின் உறுதி மொழியான நவீன டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் புதிய தலைமுறையினருக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. 

இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்குக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் கட்டணப்பட்டியல் கொடுப்பனவு பகுதிகள், ATM கள் மற்றும் CDM கள் போன்றன முற்றிலும் சுயமாக முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.  

இலங்கை வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டி. எம். குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “எமது புதிய நவீன வசதிகள் படைத்த BOC DIGI நிலையத்தை கண்டியில் அறிமுகம் செய்துள்ளதையிட்டு பெருமையடைகிறோம். இதனூடாக, எமது வாடிக்கையாளர்களுக்குச் சௌகரியமான வகையில் தமது DIGI வாழ்க்கைப் பாணியை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். இந்த அறிமுகத்துடன், எமது டிஜிட்டல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து, எமது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறை வங்கியியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும். 

டிஜிட்டலில் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதனூடாக, எம்மால் ஒப்பற்ற, சௌகரியமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை எமது வாடிக்கையாள ர்களுக்குப் பெற்றுக்கொடு க்கக் கூடியதாக இருக்கும்” என்றார்.   

- சிசிர குமார பண்டார


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .