2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கற்பிட்டிக்கு வேள்ட் விஷன் லங்கா உதவி

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டியிலுள்ள கிராம சிறுவர் அபிவிருத்திச் செயற்குழுவைப் பலப்படுத்துவதற்கான முயற்சியாக, வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தால் கற்பிட்டியைச் சேர்ந்த அனைத்துக் கிராமங்களினதும் கிராம சேவகர்களுக்கான செயலரங்கொன்று நடத்தப்பட்டிருந்தது. பொதுச் சுகாதார மருத்துவச்சிகள், பொலிஸ் அதிகாரிகள், சமுதாய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகள், கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். 

கற்பிட்டி பிரதேச செயலாளர் நந்தன சோமதிலக, கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியான பொலிஸ் கண்காணிப்பாளர் லக்‌ஷ்மன் ரண்வராச்சி ஆகியோர், கிராம சிறுவர் அபிவிருத்திச் செயற்குழுக்களை மீளுயிர்க்க வைத்து, கிராம மட்ட செயற்குழுக்கள் செயற்படுவதற்கான வழிகளை உருவாக்குவதற்கான இந்த முன்னெடுப்புக்குத் தலைமை தாங்கியிருந்தனர். 

இந்தச் செயலமர்வானது வேள்ட் விஷன் லங்கா அமைப்பின் கற்பிட்டி பிரதேச நிகழ்ச்சித்திட்டத்தால் ஆதரவளிக்கப்பட்டதோடு, கற்பிட்டி பிரதேச செயலாளர், கற்பிட்டி பொலிஸ் நிலையம் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், கற்பிட்டியைச் சேர்ந்த அனைத்து கிராம சிறுவர் அபிவிருத்திச் செயற்குழுக்களுக்கான பலமான எதிர்காலத்திட்டமாக அமையும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .