2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

களனி கேபல்ஸ் பிஎல்சிக்கு விருது

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கேபல்ஸ் பிஎல்சி, உலகத்தர விருதை பாரிய உற்பத்தி பிரிவில் வெற்றியீட்டியிருந்தது. ஆசிய பசுபிக் தர நிறுவனத்தினால் (APQO) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உலகத்தர சர்வதேச வினைத்திறன் சிறப்புகள் விருதுகள் - 2017’ இல் இந்த விருதைத் தனதாக்கியிருந்தது.  

பிலிப்பைன்ஸ், மனிலா ஓகதா ஹோட்டலில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 2017 சர்வதேச தர மாநாட்டுக்கு நிகராக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  

ஆசிய பசுபிக் தர நிறுவனத்தின் (APQO) தலைவரும் சர்வதேச வினைத்திறன் சிறப்புகள் விருதுகள் நிறைவேற்று கழகத்தின் தலைவருமான சார்ள்ஸ் ஓப்ரி கருத்துத்தெரிவிக்கையில், “ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தைச்சேர்ந்த 11 நாடுகளைச் சேர்ந்த 22 நிறுவனங்கள் அறிவிக்கப்படுவதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். உலகத்தரம் வாய்ந்த தர வினைத்திறன் செயற்பாடுகளுக்காக இந்நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ‘மெல்கம் பால்ட்ரிச் வினைத்திறன் சிறப்பு விருதுகள்’ மாதிரிக்கமைய ‘சர்வதேச வினைத்திறன் சிறப்பு விருதுகள்’ வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.  

GPEA செயன்முறையினூடாக வினைத்திறன் சிறப்பை எய்துவது தொடர்பில் விழிப்புணர்வு ஊக்குவிக்கப்படுவதுடன், சர்வதேச வியாபார செயற்பாடுகள் மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனமாக இது அமைந்துள்ளது.

GPEA ஐ ஏற்பாடு செய்யும் APQO ஐ ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச்சேர்ந்த நாடுகளில் காணப்படும் தேசிய தர நிறுவனங்களினால் நிறுவப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தரத்துக்கான அமெரிக்க சங்கமும் அடங்கியுள்ளது. தரத்துக்கான பிரதான செயற்பாட்டாளராக இது அமைந்துள்ளதுடன், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் போன்றவற்றுக்கான தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது.  

களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத்தெரிவிக்கையில், “சர்வதேச சந்தைகளை எய்துவதை நோக்கி நாம் வேகமாகப் பயணித்து வருகிறோம். சர்வதேச மட்டத்தில் இலத்திரனியல் கேபள்கள் சந்தையில் முன்னணி வர்த்தக நாமமாகக் களனி கேபல்ஸ் திகழ்கிறது. எமது தயாரிப்புக்கு சர்வதேச மட்டத்தில் கிடைத்த சிறந்த கௌரவிப்பாக இந்த விருது அமைந்துள்ளது. சர்வதேச கொள்வனவாளர்களுக்கு இந்த விருது சிறந்த அடித்தளமாக அமையும். உலகத்தர சர்வதேச வினைத்திறன் சிறப்பு விருதுகளில் வெற்றியீட்டிய நிறுவனம் பெருமளவான சந்தர்ப்பங்களில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக வளர்ச்சியடைகிறது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .