2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கார்கில்ஸ் வங்கிக்கு இரண்டு உச்சநிலை தரமுயர்வு

Editorial   / 2020 ஜூலை 16 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்கில்ஸ் வங்கி லிமிட்டெட் நிறுவனத்தின் கடன் தர மதிப்பீட்டை ‘A-(lka)’ இலிருந்து ‘A+(lka)’ ஸ்திரநிலை தோற்றத்திற்கு மேம்படுத்தியுள்ளது.

இலங்கை வங்கிகளின் தேசிய தர மதிப்பீடுகள் முறைமையை நாட்டின் பிற வழங்குநர்களுடன் ஒப்பிடும் போது அவை தமது கடன் தகுதிக்கான சிறந்த அளவுகோலாக கருதுகின்றன. 

இலங்கையின் தேசிய தர மதிப்பீட்டு அளவை மறுசீரமைப்பின் விளைவாக கார்கில்ஸ் வங்கி லிமிட்டெட்டின் தேசிய நீண்ட கால தர மதிப்பீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் வங்கியின் கடன் மதிப்பீட்டின் இந்த நேர்மறையான மீள்திருத்தம், வங்கியின் முயற்சிகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ளும் அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களை நிதியியல் ரீதியாக இணைத்து அரவணைத்தல், கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கான சுறுசுறுப்பு மற்றும் எதிர்காலத்திற்கேற்ப தன்னை மாற்றியமைத்து வருவதற்கான ஒரு சான்றாக இது அமைந்துள்ளது. 

அதே சமயம், 175 ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு உண்மையான சேவையை வழங்கி வந்துள்ள கார்கில்ஸ் என்ற அதன் தாய் நிறுவன வர்த்தகநாமத்தின் தளராத ஆதரவுடன் வங்கிச்சேவை தொழிற்துறையில் வலுவான சேவைகளைப் பேணி வருகின்றது. 

இந்த விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளின் அத்திவாரத்துடன் கட்டியெழுப்பட்ட, மற்றும் இந்த பாரம்பரியத்திற்கும், 'மனித உணர்விற்கு மதிப்பளிக்கும் வங்கி' என்ற கொள்கைக்கும் உண்மையாக அர்த்தம் கற்பிக்கும் கார்கில்ஸ் வங்கி, இந்த கருப்பொருள் சார்ந்த வங்கிச் சேவையை அனைவரையும் அரவணைக்கும் மற்றும் அணுகக்கூடிய நிதியியல் நிறுவனமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது.

இந்த சாதனை குறித்து கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேந்திரா தியாகராஜா அவர்கள் கருத்து வெளியிடுகையில், 'கார்கில்ஸ் வங்கி தனது குவைஉh தரமதிப்பீட்டில் 2 இடங்கள் முன்னேறி, யு 10 (டமய) ஸ்திரநிலை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன். 

கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேந்திரா தியாகராஜா 

நீண்ட காலமாக இயங்கி வருகின்ற சில பாரிய வங்கிகளுக்கு இணையாக வெறுமனே எமது 6 வருட குறுகிய தொழிற்பாட்டுக் காலத்தில் இந்த மகத்துவத்தை அடையப்பெற்றுள்ளோம். எங்கள் தாய் நிறுவனத்தின் வலுவான ஆதரவின் பக்கபலத்துடன் இலங்கையில் வங்கிச்சேவைத் தொழிற்துறைக்கு நாங்கள் கொண்டு வரும் தனித்துவமான மதிப்பு மற்றும் முறைமைக்கு இது ஒரு சான்று என்று நான் நம்புகிறேன்,' என்று குறிப்பிட்டார். 

'நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான எங்கள் திறனை விரிவாக்குவதில் நாங்கள் மகத்தான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். எதிர்வரும் ஆண்டை எடுத்துக் கொண்டால், உலகளாவில் பரவி வருகின்ற தொற்றுநோய்க்குப் பின்னர் மீண்டு எழ முயற்சிக்கின்ற ஒட்டுமோத்த பொருளாதாரத்துடன் சேர்த்து வங்கிச்சேவைத் தொழிற்துறைக்கும் சவால் மிக்க ஒரு ஆண்டாக அமையும் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. 

எவ்வாறாயினும், வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்கும் அதே வேளையில் எங்கள் தனித்துவமான பெறுமான முன்மொழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே சமயம். எங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான எங்கள் திட்டத்தில் முன்னேறிச் செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்று அவர் மேலும் கூறினார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இலக்கினை எட்டுவதற்கு உதவியமைக்காக கார்கில்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள், வணிக பங்காளர்கள் மற்றும் தொடர்புபட்ட ஏனைய தரப்பினரின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது.

தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், வணிக வங்கிச்சேவை மற்றும் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வட்டி வீதங்கள் மற்றும் இணையற்ற சேவையுடன் கடனட்டைகள் போன்வற்றில் புத்தாக்கமான நிதியியல் தீர்வுகளுடன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகத்தான சேவையை வழங்க தயாராக உள்ளது. 

கார்கில்ஸ் வங்கியின் தலைமை அலுவலகம் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ளதுடன், மெயிட்லான்ட் கிரெசன்ட், மஹரகமை, பழைய சோனகத் தெரு, வத்தளை, கண்டி, பேராதனை, நுவரெலியா, சிலாபம், கோட்டை, ராஜகிரிய, இரத்தினபுரி, தனமல்வில, மாத்தறை, காலி, குருணாகல், கதுருவெல, வவுனியா, சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கிளைகளையும் கொண்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .