2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கிறவுண் பெயின்ட்ஸுக்கு சிறப்பிடம்

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற ‘கட்டட நிர்மாணக் கண்காட்சி 2017’ (Construction Expo 2017) நிகழ்வில் கிறவுன் பெயின்ட்ஸ் மிகவுயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தது. கண்காட்சி வளாகத்தின் மத்தியில் இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்த JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் காட்சிக் கூடம் பக்கிங்ஹாம் மாளிகையின் உருவத்தில் காணப்பட்டது. அதிமேன்மைக்குரிய பிரித்தானிய மகாராணியின் வெளிப்படையான நியமனத்தின் பேரில் ‘இராஜ அத்தாட்சிப் பத்திரம்’ (Royal Warrant) பெற்ற இலங்கையின் ஒரேயொரு வர்ணப்பூச்சு (பெயின்ட்) என்ற பெருமைக்குரிய அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாகவே இக்காட்சியறை இவ்வுருவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. Royal Warrant என்பது இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்து நிலைத்திருக்கும் சிறப்புப் பெயராக காணப்படுகின்றது.  

கட்டட நிர்மாணத் துறையின் மிக முன்னேற்றகரமான புத்தாக்கங்களை காட்சிப்படுத்தும் விடயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக முன்னேறியிருக்கும் இக்கண்காட்சியானது, இத்துறையிலுள்ள அனைத்து முக்கியமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களும் ஒன்றுகூடுவதற்கான ஒரு களமாக அமைந்திருந்தது. அதுமட்டுமன்றி, தென்னாசியப் பிராந்தியத்தில் கட்டட நிர்மாணத் துறையில் எதிர்காலத்தில் சாத்தியமுடைய பெருமளவிலான சந்தை வாய்ப்புக்களையும் இந்நிகழ்வு வழங்கியது. “JAT நிறுவனத்தினால் சந்தைப்படுத்தப்படுகின்ற மிகச் சிறந்த ஒரு வர்த்தக குறியீடான கிறவுண் பெயின்ட்ஸ், சர்வதேச அளவில் துறைசார் நியமங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்ட அதிக வகைகளிலான உற்பத்திகளில் இருந்து தமக்கு பொருத்தமானதைத் தெரிவு செய்வதற்கான வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அத்துடன் பல வருடங்களாக தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தின் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்திருக்கின்றது. பல்வேறு வகையான கிறவுண் உற்பத்திகளை பிரத்தியேகமாக தன்னகத்தே கொண்ட 50 புதிய விற்பனை நிலையங்களை இவ்வருடம் திறந்து வைப்பதன் மூலம், பெறுமதியான வாடிக்கையாளர்களின் வர்ணப்பூச்சு தொடர்பான தேவைகள் மேலும் சிறப்பாக பூர்த்தி செய்யப்படும்” என்று JAT நிறுவனத்தின் தென்னாசிய விற்பனைகள் மற்றும் தொழில்நுட்ப பணிப்பாளர் வசந்த குணரத்ன தெரிவித்தார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .