2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கி மொபைல் ஊடாக வௌிநாட்டு பணமாற்ற சேவை அறிமுகம்

Editorial   / 2018 ஜூன் 28 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் முதல் தடவையாக ‘மொபைல் ஊடாக கணக்குக்கு’ பணம் அனுப்பும் சேவைகளை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. கிழக்காசிய தேசத்தில் வாழும் சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட இலங்கையின் புலம்பெயர் சமூகத்துக்கு நேரடியாகப் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்தச் சேவை வசதியாக அமையும்.  

வரையறுக்கப்பட்ட குளோபல் மணி எக்ஸ்பிரஸ் (GME) நிறுவனத்துடன் இணைந்து, இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் கொரிய குடியரசில் முதலாவதாக வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்துக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ள கம்பனிகளில் இதுவும் ஒன்றாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான குறைந்த கட்டணத்தில், ஆகக் கூடிய வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தில் நேரடிப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட இது வழியமைத்துள்ளது.  

இந்தப் புதிய சேவையின் சம்பிரதாயபூர்வ அறிமுகம், தென்கொரியத் தலைநகர் சோலில் அண்மையில் நடைபெற்றது. கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.ரெங்கநாதன் தலைமையிலான வங்கித் தூதுக்குழு இதில் பங்கேற்றது.  

பணம் அனுப்புதலுக்கு இங்கு மிகவும் சாதகமான சந்தை வாய்ப்புகள் உள்ளமையைக் கருத்தில் கொண்டு, தென் கொரியா வர்த்தக வங்கிகளுக்கு, அதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதலை மட்டுப்படுத்தி உள்ளது. 2017 ஓகஸ்ட் முதல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, இதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.GME - கொமர்ஷல் வங்கி ‘மொபைல் ஊடாக கணக்குக்குப் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்பட முன், கொமர்ஷல் வங்கிக்கே உரித்தான அதி நவீன இணைய வழி நேரடிப் பணப்பரிமாற்ற சேவையான ‘ஈ எக்ஸ்சேன்ஜ்’ தென் கொரியாவில் வாழும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம், வருடாந்தம் கணிசமான தொகைகைளைக் கையாண்டு வந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .