2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொமர்ஷல் வங்கிக்கு மூன்று விருதுகள்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘ஏசியாமணி’யின் வருடாந்த வங்கித் துறை விருது வழங்கும் விழாவில், இம்முறை கொமர்ஷல் வங்கி மூன்று முக்கிய விருதுகளைத் தனதாக்கியுள்ளது.

‘சிறந்த வங்கி’ ‘பிரீமியம் (உயர்தர) வங்கிச் சேவையில் சிறந்த வங்கி’ மற்றும் ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தில் (CSR) சிறந்த வங்கி’ என்பனவே அந்த மூன்று விருதுகளுமாகும்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வங்கித் துறையில், மிகவும் அதிகாரபூர்வமான குரலாக மதிக்கப்படும் இதழே, ‘ஏஸியாமணி’ ஆகும்.  

இந்த விழாவில் மிகவும் கீர்த்திமிக்க விருதான ‘ஏஸியாமணி’யின் மிகச் சிறந்த வங்கி விருது, கொமர்ஷல் வங்கியின் 2017ஆம் ஆண்டின் இலாபத்தை அங்கிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதன் வளர்ச்சி, தொடர்புபட்ட சக செயற்பாடுகள், மாறி வரும் சந்தை நிலைமைகளுக்கும் வாடிக்கையாளர் தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் அதன் போக்கு, என்பனவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  

பிரீமியம் வங்கிச் சேவைகளுக்கான சிறந்த விருது, இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் செல்வ முகாமைத்துவத்துவச் செயற்பாடுகளுக்கான அங்கிகாரமாக அமைந்துள்ளது.

மீளாய்வுக்குரிய காலப் பகுதியில் போட்டியாளர்களை சமாளிப்பதில் அதன் திறன் இங்கு பிரதானமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தேறிய புதிய சொத்துகளை வெல்லுவதில், வங்கியின் மூலோபாயம், வர்த்தக வருமானங்களில் வாடிக்கையாளர்களுடனான தொடர்புகள், வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம், டிஜிட்டல் சேவைகள் முன்னகர்வுகள், இந்த விருதுகளை வெல்வதற்கான வாடிக்கையாளர் பங்களிப்பு, சாட்சியங்கள் என்பனவும் இங்கே மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

‘CSR க்கான சிறந்த வங்கி விருது’ வங்கியின் CSR திட்டங்களை அங்கிகரிக்கும் வகையில், கடந்த ஆண்டில் எட்டப்பட்ட மைல்கற்கள் மற்றும் சாதனைகளுக்கான ஓர் அங்கிகாரமாக அமைந்துள்ளது.

நன்கொடை மற்றும் மனித நேய இயல்புகள், இங்கே கருத்தில் கொள்ளப்பட்ட போதிலும் கூட, வங்கி அதன் வாடிக்கையாளர் தளத்துக்கு, நிதி அல்லது சந்தைத் தீர்வுகளை வழங்கியுள்ளதா என்பதிலும் இங்கே கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X