2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொலனியல் மோட்டர்ஸின் கிம்கோ டவுன் ரவுன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலனியல் மோட்டர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுக்கும் தாய்லாந்தைத் தலைமையகமாகக் கொண்ட க்வாங் ஜாங் மோட்டர்ஸ் கம்பனிக்கும் இடையிலான பங்காண்மை காரணமாக, இலங்கையில் கிம்கோ டவுன்ரவுன் 350I, 125I ஆகிய ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யு, கவசாக்கி போன்ற உலகத் தரம்வாய்ந்த வாகன உற்பத்தியாளர்களுக்கு இயந்திரங்களைத் தயாரித்துக் கொடுப்பதில் கிம்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிம்கோ வர்த்தகச் சின்னம் கொண்ட வாகனங்கள் பயணிக்கின்றன. 

மிருதுவானதும் எடுப்பானதும் கம்பீரமானதுமான தோற்றத்துடன் கூடிய இந்த ஸ்கூட்டர்களைச் செலுத்துகையில் மேம்பட்ட உன்னத உணர்வுடன் கூடிய சௌகரியம் கிடைக்கின்றது. இவை அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான திறன்களைக் கொண்டிருப்பதுடன், நகர்ப்புறங்களில் வேகமானதும் விவேகமானதுமான பயணத்துக்கும் தகுதிபடைத்ததாய் காணப்படுகின்றன. ஒரு மோட்டார் சைக்கிளில் என்னவெல்லாம் இருக்கவேண்டும் என்று ஒரு மோட்டார் சைக்கிள் பாவனையாளரின் கனவை, கிம்கோ டவுன்டவுன் நனவாக்கியுள்ளமை இவற்றில் அடங்கியுள்ள சிறப்பு அம்சங்களாகும். 

கிம்கோ டவுன் ரவுன் 350I, 125I ஸ்கூட்டர்கள் ஆக்ரோஷமான ஸ்போர்ட்ஸ் வடிவமைப்புகளைக் கொண்டிருப்பதுடன் பயணிகளுக்கு அழகையும் சௌகரியத்தையும் வழங்கும் வகையிலான சக்கரங்களின் அளவுகளும் அமைந்திருப்பதுடன் ABS தடுப்புகள், LED லைட்டுகள், மத்திய, பக்க ஸ்டான்டுகள் ஊடாக, நிறுத்திவைத்திருக்கும் போது வெளிப்படும் மிடுக்கான தோற்றம், மற்றும் இரண்டு தலைக்கவசங்களை வைக்கக்கூடியதாக ஆசனத்தின் கீழ்ப்பகுதி போன்ற காரணங்களால் கெம்போ டவுன் ரவுன் அன்றாடப் பாவனையாளர்களால் சந்தையில் அதிகரித்த கேள்விகளுடன் காணப்படுகின்றன. 

கிம்கோ டவுன் ரவுன் 350I, 125I ஸ்கூட்டர்கள் பாதுகாப்பானதும் சௌகரியமானதுமான உணர்வுடன் போதுமான சக்தி மிக்க எண்ணங்களுடன் நகர எல்லையைக் கடந்த, அடுத்த உங்களின் விடுமுறைக்கான பயணத்துக்கு ஆயத்தமாக இருக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .