2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பில் Uber MOTO சேவை

Editorial   / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Uber, அதன் மோட்டார் சைக்கிள் பிரயாண சேவையான UberMOTOவை கொழும்பில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பல்வேறு பிரிவுகளிலான பயணத் தீர்வுகளை கொழும்பு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க Uber மற்றுமொரு படிமுறையை ஆரம்பித்துள்ளது. கொழும்பில் வாழும் மக்கள், ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்கின்றனர்.   

இந்த வைபவத்தில் கலந்து கொண்ட Uberஇன் இலங்கைக்கான தலைவர் அன்கிட் குப்தா, ‘UberMOTOவை கொழும்பில் ஆரம்பித்து வைப்பதையிட்டு நாம் மிகவும் பூரிப்படைகின்றோம்” என்று கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “குறைந்த செலவிலான, நம்பகமான மற்றுமொரு போக்குவரத்து முறையொன்றை நாம் நகரத்துக்குப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இந்த உற்பத்தியின் அறிமுகம் மூலம் கொழும்பு நகரின் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த முடியும். எமது சாரதி பங்காளிகளுக்கு வருமானத்தை அதிகரித்துக் கொடுக்கும் ஒரு வாய்ப்பையும் இதன் மூலம் நாம் ஏற்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.   

UberMOTO, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், சிக்கனமான, இலகுவான மோட்டார் சைக்கிள் பயணத்தை Uber app ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொடுக்கிறது. சாரதி, சைக்கிள் பற்றிய விவரங்கள், Uber பயணங்களின் போது பயணிகளுக்குப் பெற்றுக்கொள்வது போன்று கிடைக்கும். பயணத்துக்கு முன்னரும், பயணம் செய்யும் போதும், பயணத்தின் பின்னரும் ஏற்பாட்டிலுள்ள சகல பொதுவான பாதுகாப்பு அம்சங்களும் இதில் அமைந்திருக்கும். இவற்றில் GPS மூலம் பாதை காட்டுதல், இரு சாரார் கருத்துப் பரிமாறல்கள் மற்றும் பயண விவரங்களை குடும்பத்தினர், நண்பர்களிடம் பரிமாறிக்கொள்ளும் சேவையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.   

MOTO, நகரின் மிகவும் சிக்கனமான பயண முறையாக அமைந்திருக்கும். சுமார் 25 ரூபாயில் இருந்து கட்டணங்கள் ஆரம்பமாகும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .