2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பில் சுகாதார, மருத்துவக் கண்காட்சி

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார விழிப்புணர்வு, பல்வேறுபட்ட நோய்களுக்கான சமீபத்திய சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் சுகாதார, மருத்துவக் கண்காட்சியை, எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம், சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த வருடம், மார்ச் மாதம் 01,02,03 ஆகிய திகதிகளில், காலை 10 மணி முதல் மாலை 07 மணி வரை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.  

ஆரம்ப வைபவத்தில் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்கள். இலங்கையிலுள்ள அநேக வைத்தியசாலைகள் பங்குபற்றவுள்ள இந்தக் கண்காட்சியில், இந்தியாவிலிருந்தும் க்ளினிக், வைத்தியசாலைகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

செயற்கைக் கருத்தரிப்புக்கு, நம்பிக்கையானதும் இந்தியாவில் முன்னணி மருத்துவமனையாகவும் விளங்கும் ஏஆர்சி கருத்தரிப்பு, ஆராய்ச்சி சர்வதேச நிலையம், அண்மையில் கொழும்பிலும் தனது மையம் ஒற்றைத் திறந்திருந்தது. இதன் ஸ்தாபகரும் தலைவருமான வைத்தியர் சரவணன் லக்‌ஷ்மணன், இந்த மருத்துவக் கண்காட்சியல் 2013ஆம் ஆண்டு முதல் தவறாது பங்குபற்றி வருகின்றார். 

வைத்தியர் சரவணன் இது குறித்துக் கூறும்போது, “ஏஆர்சி செயற்கைக் கருத்தரிப்பு நிலையம் மட்டும்தான், இந்தியாவிலிருந்து முன்வந்து, தன்னுடைய நிபுணத்துவ சேவைகளை வழங்கும் முகமாகத் தொடர்ந்து ஆறாவது தடவையாக, சுகாதார மருத்துவக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனமாகத் திகழ்கின்றது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், குழந்தை இல்லாத தம்பதிகள் தமது குறைபாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுச் சென்றனர். இந்த வருடமும் ஏஆர்சி, மருத்துவக் கண்காட்சியில் பங்குபற்றி, விழிப்புணர்வு வழிகாட்டல்களை வழங்கவுள்ளது. அத்துடன், குழந்தை அற்ற, வருமானம் குறைந்த தம்பதிகளுக்கு விசேட கழிவுகளுடன் கூடிய வெளிச்சோதனை முறை கருக்கட்டல்| (IVF) சிகிச்சைகளும் அளிக்கப்படவுள்ளன” என்றார்.                                


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .