2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பில் ‘தி டிஸைனர் வெடிங் ஷோ’

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

‘தி  டிஸைனர் வெடிங் ஷோ 2017’ கொழும்பில், இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. ‘Bride and Groom’ சஞ்சிகை, கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலுடன் இணைந்து இதைன முன்னெடுக்கவுள்ளது. வருடாந்தம் இடம்பெறும் இத்தனித்துவமான நிகழ்வில்,  தேசத்திலுள்ள முன்னணி திருமண ஏற்பாட்டு நிபுணர்களின் நேர்த்தியான திருமண வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்படும். இந்நிகழ்வின் போது, முன்னணி திருமண வடிவமைப்பாளர்கள், சிகை மற்றும் ஒப்பனை கலைஞர்கள் ஒன்றிணைவதுடன் இலங்கை திருமண ஏற்பாடு தொழிற்றுறையின் நடைமுறை போக்குகளை வெளிப்படுத்துவார்கள். 

 ‘Bride and Groom’ சஞ்சிகை, கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலுடன் இணைந்து காட்சிப்படுத்தும் இந்நிகழ்வில், உலக பிரசித்திபெற்ற டி லேன்ரொல்லே சகோதரர்கள் பங்கேற்கவுள்ளதுடன், கொழும்பு நகரில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள ஆடம்பர ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெறும் இவ்வாறான முதல் நிகழ்வும் இதுவே ஆகும். 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் வெற்றிகரமான ஏழு திருமண வடிவமைப்புகள் கண்காட்சிகளை நிறைவு செய்துள்ளதுடன், இவ்வாண்டின் கண்காட்சியில், டி லேன்ரொல்லே சகோதரர்கள் என பெரிதும் அறியப்பட்டுள்ள ரோஹான் மற்றும் இஷான் கூட்டிணைந்துள்ளனர். இம்முறை இலங்கையின் முன்னணி திருமண வடிவமைப்பாளர்கள், சிகை மற்றும் ஒப்பனை கலைஞர்களின் கைவண்ணத்​ைதக் காணும் அதேவேளை இச்சோகதர்களின் இசையை நேரடியாக கண்டும் கேட்டும் மகிழலாம்.  

கண்காட்சியில் பங்கேற்கும் வடிவமைப்பு கலைஞர்களின் விவரம்: சரித் விஜேசேகர, சிரில் குணரத்ன, தனஞ்ஜய பண்டார், ஹமீடியா, மைக்கல் விஜேசூரிய, நயனா கருணாரத்ன, பிரேமசிறி ஹேவாவசம், பிவீஎஸ் ஜயரத்ன, ரமணி ப்ர்ணான்டோ அன்ட் அஸ்லம் ஹுசைன், ரம்சி ரஹ்மான், ரோமேஷ் அத்தபத்து, சரிதா, சுமுது குமாரசிரி, சுமுது வசந்த, தெரின் கப்பலகே, துசித எதுகல, யோலாந் அளுவிகார. இந்நிகழ்வில் லூ சிங் வோங் உருவாக்கிய தனிப்பட்ட படைப்புகளை பராட்டி அவருக்கு விசேட வாழ்நாள் சாதனையாளர் விருதொன்று வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்​ைவப் பற்றி ஷங்கிரி-லா ஹோட்டல் துணைத்தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர் திமோதி ரைட் கருத்து கூறுகையில் “‘டிஸைனர் வெடிங் ஷோ 2017’ நிகழ்வின் விருந்தோம்பல் பங்காளராக திகழ்வது மகிழ்ச்சி தருகின்றது. சில தினங்களுக்கு முன்னரே கதவுகளைத் திறந்த நாம், மணப்பெண் அலங்காரங்கள் மற்றும் திருமண ஏற்பாடுகள் தொழிற்துறையில் எமக்குள்ள வரவேற்பை கண்டு பூரிப்படைந்துள்ளோம்” என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .