2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பில் ‘நிர்மாணம் 2018’ கண்காட்சி

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல்தர நிர்மாணத்துறை கண்காட்சியாக திகழும் ‘நிர்மாணம் 2018’ (Construct 2018) கண்காட்சியானது, ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, கொழும்பிலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் (SBMEC) நடைபெறவுள்ளது.

அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக, மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு, இலங்கையின் மிகப் பெரியதும், எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடியதுமான கட்டட நிர்மாணத் துறைசார் நிகழ்வாக காணப்படுகின்ற அதேவேளை, கட்டட நிர்மாணப் பொருட்கள், கட்டட நிர்மாணச் சேவை மற்றும் நிர்மாண உபகரணங்கள் உள்ளடங்கலாக, பரந்துபட்ட வகைகளிலான நியமமாக்கப்பட்ட சேவைகளை காட்சிப்படுத்தும்.

ஒட்டுமொத்த தென்னாசியப் பிராந்தியத்திலுமே, கட்டட நிர்மாணத் துறையில் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற அதேவேளை, அனைத்து விடயங்களையும் தன்னகத்தே கொண்ட குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக மதிப்பிடப்படுகின்ற இக்கண்காட்சியை, தேசிய நிர்மாண சங்கம், இலங்கை தொடர்ச்சியாக 18ஆவது ஆண்டில் ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய நிர்மாண சங்கம் இலங்கையின் தலைவர் அதுல பிரியந்த கலகொட கருத்துத் தெரிவிக்கையில், “எண்ணிலடங்கா உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுணர்களை ஒன்றுபடுத்தி ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகின்ற ஒரு அற்புதமான நிகழ்வாக திகழ்கின்ற ‘நிர்மாணம் 2018’ கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்துவதையிட்டு, நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். ‘நிர்மாணம் 2018’ கண்காட்சியானது, நிர்மாணத் துறை தொடர்பான முழுமையான தீர்வுகளை வழங்குவதுடன், அத் தீர்வுகள் உலகளாவிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இன்றைய நடைமுறைப் போக்குகளுக்கு இணையானவையாகவும் அமைந்திருக்கும். உள்நாட்டிலும், இப்பிராந்தியத்திலும் இருக்கின்ற அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கவரும் விதமாகவும் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் முகமாகவும் இந்தக் கண்காட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் நவீன மற்றும் புத்தாக்க கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட காட்சிக் கூடங்கள் காணப்படுவதுடன், இங்கு வருகைதரும் பார்வையாளர்கள் கட்டிட நிர்மாணத்தின் விதிமுறைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக கொண்டிருக்கின்ற கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் இது முக்கிய பங்கினை வகிக்கும்” என்று தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .