2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொவிட்-19 நிதியத்துக்கு GSK ரூ. 05 மில்லியன் பங்களிப்பு

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது, உலகளாவில் பரவி வருகின்ற தொற்று நோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய சுகாதாரம், மனிதாபிமானம் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக, கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு, ஐந்து மில்லியன் ரூபாயை கிளாக்ஸோஸ்மித்க்ளைன் (GSK) நன்கொடையாக அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி மருந்து, நுகர்வோர் சுகாதார நிறுவனம் என்ற வகையில், தன் பங்குக்கு, உலகளவில் பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றைக் கையாள்வதற்கு உதவும் வகையில், GSK Global  கைக்கொண்டு வருகின்ற வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய்ந்து, அவற்றை எவ்வாறு இலங்கையில் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதில், தன்னாலான அனைத்து முயற்சிகளையும் GSK  மேற்கொண்டு வருகின்றது.

GSK Sri Lanka  ஆரோக்கியம், இரைப்பை குடல் ஆரோக்கியம், வாய்வழி சுகாதாரப் பராமரிப்பு, வலி, சுவாசம் ஆகிய துறைகளில் செயற்பட்டு வருகிறது. நாட்டில் மருத்துவரின் மருந்துச்சிட்டையின்றிக் கொள்வனவு செய்யக்கூடிய உற்பத்திப் பிரிவில் (பனடோல்) சந்தையில் அதியுச்சத்தில் திகழும் செயற்பாட்டாளர்களுள் ஒன்றாக GSK  திகழ்ந்து வருவதுடன், மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், சுவாசம், தடுப்பூசிகளில் முன்னணி மருந்துகள், சாதனங்களையும் வழங்கி வருகிறது.

GSK Sri Lanka  நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த அசாதாரண காலகட்டத்தில், வணிகத் தொடர்ச்சியானது, பிரதானமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. தயாரிப்புகள், தேவைப்படும் மக்களுக்குக் கிடைக்கும் வண்ணம், உற்பத்தி ஆலைகள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .