2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோம்பா பேபி சோப் மீள அறிமுகம்

Editorial   / 2017 நவம்பர் 08 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் குழந்தைகள் பராமரிப்புக்கான மூலிகை சவர்க்கார தயாரிப்பான கோம்ப பேபி சோப், புதிய மூலிகை சேர்மானங்களுடன் சந்தையில் மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனிய நறுமணத்துடன், மேம்படுத்தப்பட்டு இந்த தயாரிப்பு மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

வேப்பம் இலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தயாரிப்புகள், கற்றாழை, ரத்மல், பனீர் மற்றும் மரவேம்பு ஆகியன சேர்த்து மேலும் மெருகேற்றப்பட்டுள்ளன. சந்தை பிரிவில் கோம்பா பேபி சவர்க்காரத்தை பிரத்தியேகமான தயாரிப்பாக அமைந்துள்ளதாக சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் அறிவித்துள்ளது. 

கோம்பா பேபி தெரிவுகளில் சோப், கொலோன், கிறீம், பவுடர், சம்பு, ஒயில், பேபி வொஷ் மற்றும் அன்பளிப்பு பொதி போன்றன அடங்கியுள்ளன. மூலிகை சேர்மானங்களை கொண்டுள்ளதுடன், சந்தையில் காணப்படும் சிறந்த தயாரிப்பாகவும் திகழச் செய்துள்ளது. ‘சுவதேஷி தயாரிப்புகள், வளர்ந்து வரும் சந்தைப்பிரிவுகளுக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. இயற்கைக்கு நட்பானதாகவும், சிறந்த சுகாதாரம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் சருமத்துக்கு மிருதுவானதாகவும் அமைந்துள்ளது’ என நிறுவனம் அறிவித்துள்ளது. 

சுவதேஷியைச் சேர்ந்த நாம், 1941ஆம் ஆண்டு முதல் மிருதுவான மூலிகை சவர்க்காரத்தை உற்பத்தி செய்து வருகிறோம், தற்போது கோம்பா பேபி வர்த்தக நாமத்தை அதிகளவு மூலிகை சேர்மானங்களுடன் மீள அறிமுகம் செய்துள்ளோம். இதில் மரவேம்பு, ரத்மல் போன்றன பாவனையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

மீள அறிமுகம் செய்யப்பட்ட கோம்பா பேபி சவர்க்காரம் அளவில் பெரிதாக அமைந்துள்ளதுடன், வேம்பு, கற்றாழை, ரத்மல், பனீர் மற்றும் மரவேம்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக இவை தூய்மையாக்கல், ஈரப்பதனூட்டல் மற்றும் மென்மை மற்றும் சருமத்துக்கு இதமளிப்பதற்கும் சருமத்தின் மிருதுவான தன்மைக்கு பாதுகாப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. 

புதிய கோம்பா பேபி மூலிகை சோப்பில், வேம்பு, கற்றாழை மற்றும் ஒலிவ் எண்ணெய் போன்றன அடங்கியுள்ளன. கோம்பா பேபி புளோரல் சோப்பில் வேம்பு, ரத்மல், பனீர் மற்றும் ஒலிவ் எண்ணெய் ஆகியன அடங்கியுள்ளன. கோம்பா பேபி வெனிவெல் சோப்பில், வேம்பு, மரவேம்பு மற்றும் ஒலிவ் எண்ணெய் ஆகியன அடங்கியுள்ளன. இந்த சோப் வகை வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் ஐவரி போன்ற மூன்று வர்ணங்களில் காணப்படுகின்றன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .