2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

க்ளோகார்ட் வழங்கும் வெகுமதி

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்மார்கள் தமது பிள்ளைகளை பற்களை துலக்கக்கோரும் போது, அவர்களிடமிருந்து மறுப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது. க்ளோகார்ட் இந்தச் செயற்பாட்டை களிப்பம்சங்கள் நிறைந்த நடவடிக்கையாக மாற்றியிருந்ததுடன், கிருமிகளுக்கு எதிராக போராடி பரிசுகளை வெல்லுமாறும் சிறுவர்களை அழைத்திருந்தது. இதனூடாக சிறந்த வாய்ச்சுகாதாரத்தை அவர்களுக்கு பேணிக்கொள்ள முடியுமெனவும் அறிவுறுத்தியிருந்தது. 

ஹேமாஸ் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக க்ளோகார்ட் திகழ்வதுடன், நாடு முழுவதிலும் சிறந்த வாய்ச்சுகாதாரத்தை ஊக்குவித்த வண்ணமுள்ளது. இதன் பிரகாரம் அண்மையில் நாடளாவிய ரீதியில் குடும்பங்கள் மத்தியில் சிறந்த வாய்ச்சுகாதாரத்தை பேணும் பழக்கங்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையையும் முன்னெடுத்திருந்தது. 

க்ளோகார்ட் கிருமிகளுக்கு எதிராக போராடு, அதனை பயன்படுத்தி பரிசுகளை வெல்லுமாறு அறிவுறுத்தி முன்னெடுக்கப்பட்டிருந்த பிரசார நடவடிக்கைகளில் கராம்பு எண்ணெய் மற்றும் புளோரைட் போன்ற இரு பிரதான சேர்மானங்களை குறிக்கும் இரு கதாபாத்திரங்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்த பிரதான சேர்மானங்களின் மூலமாக பற்களில் துவாரங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், இதமான சுவாசத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இரு சுப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் ‘கப்டன் க்ளோ மற்றும் லேடி புளோரைட்’ என அழைக்கப்பட்டிருந்ததுடன், சிறுவர்களை பற்களை துலக்கச்செய்து, கிருமிகளுக்கு எதிராக போராடவும் ஊக்குவித்திருந்தது. 

 

சிறந்த வாய்ச்சுகாதாரத்தை பேண பழக்கப்படுத்திக்கொள்ள சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில், மவுன்டன் சைக்கிள்கள், பாடசாலை பைகள், கைக்கடிகாரங்கள் போன்ற வாராந்த பரிசுகளும், டப்கள், லப்டொப்கள் போன்ற மாதாந்த அன்பளிப்புகளும், மூன்று அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் வீதமும் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டிருந்தன. ஹேமாஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஃபியோனா ஜுரியான்ஸ் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த புகழ்பெற்ற போட்டியை மீண்டும் ஆரம்பித்ததன் நோக்கம், சிறுவர்களை பற்கலை துலக்கச்செய்ய ஊக்குவிப்பதுடன், அவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான சிறந்த வாய்ச்சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணரச்செய்வதாகும். எமது சமூகத்தின் நலனுக்காக வாய்ச்சுகாதாரத்தை நாம் ஊக்குவித்து வருவதுடன், பற்துவாரங்களற்ற தேசத்;தை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்குகிறோம்’ என்றார்.  

 இலங்கையில் 100 பிரதேசங்களில் ஹேமாஸ் போட்டிகளை முன்னெடுத்திருந்தது. இதற்காக க்ளோகார்ட் ஃவைட்ஸ் ஜேர்ம்ஸ் அன்ட் வின் ட்ரக் ஊடாக நாடு முழுவதும் பயணித்து தாய்மாருக்கு வாய்ச்சுகாதாரத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. க்ளோகார்ட் ஊக்குவிப்பு ட்ரக் இனால் சிறுவர்களுக்கு தமது பற்களை தொடர்ச்சியாக துலக்கிக்கொள்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்ததுடன், பற்களை துலக்குவதை களிப்பூட்டும் அம்சமாகவும், நினைவிருக்கும் நிகழ்வாகவும் மாற்றிக்கொள்வது பற்றியும் விளக்கியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .