2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சன்ஷைன் ஹோல்டின்ஸ் விருது வழங்கல்

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன்ஷைன் ஹோல்டிங்ஸ்சின் விவசாய மற்றும் சுவ சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றிய ஊழியர்களுகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 2017/2018 நிதியாண்டில் சிறந்த சேவைகளை வெளிப்படுத்திய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 50 வருடகால வரலாற்றில் விவசாயம் மற்றும் சுகாதார சேவைகள் துறைகளில் சிறந்த சேவையாளர்கள் ஒரே மேடையில் கௌரவிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

அத்துடன், விருதுபெற்ற ஊழியர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு வர்ணமயமான சந்தர்ப்பமாகவும் அமைந்தது.   

வட்டவளை பெருந்தோட்ட நிறுவன தலைவர் சுனில் விஜேசிங்க, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி, சன்ஷைன் குழுமத்தின் முகாமைத்துவ சபையின் உறுப்பினர்கள், அழைப்பு விருந்தினர்கள் மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார், ஹெல்த்கார்ட், வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றின் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

இந்தக் கௌரவிப்பு நிகழ்வில் 106 விருதுகள் வழங்கப்பட்டதுடன், நீண்டகால சேவைக்கான விருதுகள், சாதனை விருதுகள், முகாமைத்துவ பணிப்பாளர் விருது மற்றும் தலைவரின் விருது ஆகிய விருதுகளால் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  

வட்டவளை மற்றும் ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநித்துவப்படுத்தி சிறந்த தோட்ட முகாமையாளராக நாகியாதெனிய தோட்டத்தைச் சேர்ந்த தனுஷ்க தஸ்வத்த மற்றும் எபோட்ஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த சுரங்க தெலா ஆகிய முகாமையாளர்கள் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். 

ஹட்டன் பெருந்தோட்டத்தின் சிறந்த உதவி முகாமையாளருக்கான விருதை கெரோலினா தோட்ட முகாமையாளர் நிரோஷன் பெர்னாண்டோ தனதாக்கிக் கொண்டார். வட்டவளை தோட்டத்தின் சிறந்த முகாமையாளருக்கான விருதை தலங்கஹ தோட்டத்தின் திலிண பத்திரண பெற்றுக்கொண்டார்.  

இந்த வர்ண இரவின்போது, சுவ சேவைகள் துறையின் சிறந்த சந்தைப்படுத்தல் முகாமையாளராக டபிள்யூ.எம்.ஜீ.எம். ஹலன்கொடவும் (சன்ஷைன் ஹெல்த்கெயார்), மருந்து சந்தைப்படுத்தலில் சிறந்த முகாமையாளராக ரோஹண ஜயசிங்க மற்றும் பானுக குணசேகர, சுகாதார சேவை உபகரண சந்தைப்படுத்தலில் சிறந்த முகாமையாளராக நிஷாந்த அரசகுலசூரிய ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்த வர்ண இரவின் முக்கிய வெற்றியாக அமைந்திருந்தது. 

களனி சந்தைப்படுத்தல் குழாம் சிறந்த சந்தைப்படுத்தல் குழாமாகவும், சிறந்த விற்பனைக் குழாமாக சைடஸ் காடிவா குழாமும், சுகாதார சேவை உபகரணங்கள் சிறந்த சந்தைப்படுத்தல் குழாமாக சீமன்ஸ் குழாம் விருதைப் பெற்றுக்கொண்டது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .