2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சப்புகஸ்கந்தயில் DIMO Agribusinesses

Editorial   / 2018 மே 24 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் விவசாய வர்த்தகப் பிரிவான DIMO Agribusinesses, விவசாயத்துறையின்/ சமூகத்தின் தேவைகளை ஈடுசெய்யும் முகமாக சப்புகஸ்கந்த, மாகொலையில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளது.  

DIMO உர வகைகள், விதைகள் மற்றும் விவசாய-சிறப்பு உற்பத்திகள் உள்ளடங்கலாக, DIMO இன் விவசாயம் தொடர்புபட்ட அனைத்துத் தொழிற்பாடுகளினதும் மையமாக இப்புதிய அலுவலகம் தொழிற்படவுள்ளது.

 உணவுத் துறையில் நிபுணத்துவத்துடன் விவசாயத் துறையில் தனது செயற்பாடுகளை நிறுவனம் தொடர்ந்தும் விஸ்தரிப்பு செய்து வருகின்ற நிலையிலும், எதிர்வரும் ஆண்டுகளில் தனது தொழிற்பாடுகளை சர்வதேச ரீதியாக விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளமையாலும், இப்புதிய அலுவலகமானது நிறுவனத்தின் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

 DIMO இன் விவசாய சிறப்புச் செயற்திட்டங்கள் பிரிவின் பொது முகாமையாளர் பிரியங்க தெமட்டாவ கூறுகையில், “DIMO Agribusinesses இன் வளர்ச்சி மாற்றத்தில் இது முக்கியமானதொரு படியாகும். ‘அடுத்த தலைமுறை விவசாயம்’ என்ற எமது மகுட வாக்கியத்துக்கு அமைவாக, இலங்கையின் பாரம்பரிய விவசாயத்தை நவீன, உயர்-தொழில்நுட்ப விவசாயமாக மாற்றியமைப்பதற்கு DIMO Agribusinesses பங்களிப்பாற்றுவதுடன், ஒவ்வொரு வியாபாரத் துறை மீதும் சிறப்பாக கவனம் செலுத்தி, வியாபாரப் பிரிவுகள் மத்தியில் சிறப்பான வளப் பகிர்வுடன் அதியுச்ச பயன்பாட்டுக்கான வாய்ப்பை  வழங்கி, அவற்றை முன்னெடுக்க அனுசரணையளிக்கும். வேறுபட்ட வியாபாரப் பிரிவுகள் மத்தியில், சிறப்பான இணைப்பாடலுக்கு அனுசரணையளிப்பதுடன், வலுவான, இடைத்தொழிற்பாட்டு அணிகளை கட்டியெழுப்பவும் உதவும்” என்று குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில், “தரம், பெறுபேற்றுத்திறன் மற்றும் சேவைகளில் வேறுபாட்டைத் தோற்றுவித்து, வாடிக்கையாளர்களுக்கு உத்வேகமளிக்கும் ஒட்டுமொத்த விவசாய பெறுமானத் தொடருக்கு உரிய இணைப்புகளை ஏற்படுத்தும் வகையில் தொழிற்படுவதே DIMO Agribusinesses இன் மூலோபாயமாகும். தனி அலுவலகம் ஒன்றுடன் எமது தொழிற்பாடுகளை மத்திய முறைமைப்படுத்துவது, செயல்பாட்டை விரைவுபடுத்தி, பிணக்குகளைக் குறைத்து, தொழிற்பாடுகளின் பொறுப்புக்கூறலை அதிகரிக்க உதவும்” என்று குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .