2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமகி சைக்கிளோட்டம்-2018 நிகழ்வுக்கு RS Steel அனுசரணை

Editorial   / 2018 மே 23 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

RS Steel கம்பனி லிமிட்டெட், அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமகி சைக்கிளோட்டம் 2018’ நிகழ்வுக்கு RS QST RB 500 பூரண அனுசரணையை வழங்கியிருந்தது.  

இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விளையாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பூஸா, வெல்லபட பகுதியில் 48ஆவது தடவையாக சமகி விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   

150 கிலோமீற்றர்களை உள்வாங்கி 52 போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தச் சைக்கிளோட்ட நிகழ்வு, பூஸா, வெல்லபட பகுதியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. 

இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் RS Steel பணிப்பாளர்கள், சமகி விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் மற்றும் விசேட அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.  

இலங்கை விமானப் படையின் ஜீவன் ஜயசிங்க, ‘சமகி’ சைக்கிளோட்டம் 2018இன் வெற்றியாளராகத் தெரிவாகியிருந்தார். சைக்கிளோட்டத்தில் தெற்காசிய தங்கப் பதக்க வெற்றியாளராகவும் இவர் திகழ்கிறார். 
சமகி சைக்கிளோட்டம் 2018இன் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சனத் ஜயசிங்க மற்றும் தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் நிஷாந்த பெரேரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

RS Steel கம்பனியின் தலைமை அதிகாரி கலாநிதி சிவலிங்கம் ரமேஷ் ‘சமகி’ சைக்கிளோட்டம் 2018க்கு அனுசரணை வழங்கியிருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் தென் பிராந்தியத்தில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் சைக்கிளோட்ட நிகழ்வாக இது அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.  

“சமகி சைக்கிளோட்டம் 2018க்கு அனுசரணை வழங்க, RS Steel கம்பனி முன்வந்திருந்தமை விசேட அம்சமாகும். விளையாட்டு நிகழ்வுகள் ஒழுக்கம், நேர்த்தியான மனநிலை மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. தற்சமயம் இலங்கையின் இளைஞர்கள் சைக்கிளோட்ட போட்டிகளில் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆர்வம் காரணமாக, எமது விளையாட்டு வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளிலும் ஈடுபடத் தயாராகியுள்ளனர்” என்று மேலும் தெரிவித்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .