2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சருமத்துக்கு செழுமையூட்டும்The Body Shopஇன் எண்ணெய்கள்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

The Body Shop இன் Oils of Life தெரிவுகளின் மூலமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் பெண்கள், வித்தியாசத்தை உணர்ந்துள்ளனர். ஆழமாக புத்துணர்வூட்டும் சருமப்பராமரிப்பு தெரிவாக இது திகழ்கிறது. சருமத்துக்கு புத்துணர்ச்சியூட்டுவது, இழந்த போஷாக்கை மீள அளிப்பது, பளபளப்பை மீள வழங்குவது மற்றும் முதிர்ச்சியடைவதை குறிக்கும் அடையாளங்களை குறைப்பது போன்றவற்றை, இந்தத் தெரிவுகள் வழங்கும் வகையில் அமைந்துள்ளன. கொழும்பிலுள்ள The Body Shop விற்பனை நிலையங்களிலிருந்து முழுமையான தெரிவையும் கொள்வனவு செய்யலாம். 

A Body Shop சரும நிபுணர்கள் ஒன்றிணைந்து மூன்று விதைகளை பயன்படுத்தி, இந்த Oils of Life தெரிவை உற்பத்தி செய்துள்ளனர். உலகின் மூன்று மூலைகளிலிருந்து இந்த விதைகள் பெறப்படுகின்றன. எகிப்தின் நைல் சாரலிலிருந்து பெறப்படும் கறுப்பு சீரக விதை எண்ணெய், சீனாவின் பசுமையான மரங்களிலிருந்து பெறப்படும் கமிலியா விதை எண்ணெய் மற்றும் சிலி நாட்டின் அன்டஸ் குன்றுகளிலிருந்து பெறப்படும் ரோஸ்ஹிப் விதை எண்ணெய் ஆகியவற்றிலிருந்து, இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த விதைகள் குளிர வைக்கப்பட்டு, அதிலிருந்து தூய்மையான முறையில் எண்ணெய் பெறப்படுகிறது. சருமத்துக்கு மிகவும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. 

The Body Shop இன்டர்நஷனல் பொது முகாமையாளர் ஆர்நொட் ஜென்டுவர் கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, The Body Shop எப்போதும் மூலப்பொருட்களைப் பெற்றுள்ளதுடன், பாரம்பரிய ரீதியில் அழகை மேம்படுத்தும் முறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. எகிப்து, சிலி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட விதை எண்ணெய்களின் நலனை எமது அணியினர் இனங்கண்டதும், பெண்களின் சருமத்துக்கு போஷாக்கை பெற்றுக்கொடுக்கும், ஆழமான புத்துணர்வூட்டும் மற்றும் பளபளப்பை பெற்றுக்கொடுக்கும் சருமப்பராமரிப்பு தெரிவுகளை உற்பத்தி செய்ய நாம் தீர்மானித்தோம்” என்றார். 

Oils of Life தெரிவுகள் காலை மற்றும் மாலை சரும பராமரிப்பு வழமையை உருவாக்குவதுடன், களைப்படைந்த மற்றும் சோபை இழந்த சருமத்துக்கு புத்துணர்வூட்ட உதவியாக அமைந்திருக்கும். பெருமளவான பெண்கள் மத்தியில் இந்த தயாரிப்பு பரிசோதிக்கப்பட்ட போது, 84 சதவீத பெண்கள், இந்தச் சூத்திரம் ஆழமாக புத்துணர்வூட்டுவதாகத் தெரிவித்திருந்தனர். 82சதவீத பெண்கள் போஷாக்கு மற்றும் ஆழமாக சருமத்தினுள் ஊடுறுவும் திறன் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .