2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேச மட்ட பட்டத்தை பெற வாய்ப்புளிக்கும் IIHS

Editorial   / 2019 மே 23 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் தரப் பரீட்சையை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் இப்பொழுது கல்வியியல் துறையில் சர்வதேச மட்டத்திலான பட்டப்படிப்பு பாடநெறியை கற்கும் வாய்ப்பை IIHS வழங்குகிறது.

மலேசிய நாட்டு திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படுகின்ற இந் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் Bachelors in Education (TESL) Bachelors in Teaching மற்றும் Bachelors in Early Childhood (Hons.) பட்டங்களை பெற முடியும் எனவும் IIHS அறிவித்துள்ளது.  

Bachelors in Education TESL ஆங்கில மொழியை கற்பிக்கும் முறைகள் தொடர்பாக மேம்பட்ட அறிவுடன் கல்வியியலுக்கு ஏற்புடைய விடயங்களை உள்வாங்குகின்ற பட்டப்படிப்பு பாடநெறியாக விளங்குகிறது. இதன் மூலம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே பொதுநலவாய நாடுகளிலும் தொழில்வாய்ப்புகளை பெற வாய்ப்பு காணப்படுகிறது.

மேலும் இப் பாடநெறியினை கற்கும் மாணவர்களுக்கு மலேசிய திறந்த பல்கலைக்கழகத்துக்கு கல்விச் சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். நியாயமானதும் ஏற்க கூடியதுமான கட்டணத்தில் அறிமுகப்படுத்தும் சர்வதேச பாடநெறியாகவும் இது விளங்குகிறது.   

Bachelors in Teaching ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை (01 ஆம் ஆண்டு தொடக்கம் உயர்தரம் வரையான) கல்வியை இலக்காக கொண்டுள்ளது. அத்தோடு வினைத்திறனுடன் கல்வி தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதோடு திட்டமிடல் மற்றும் அதனை செயற்படுத்த வல்ல கல்வியியலாளர்களாக தம்மை வளர்த்துக்கொள்வதற்கும் இது தகுதியாக உள்ளது.

Bachelors in Early Childhood Education (Hons.) முன்பள்ளி பாடசாலைகளில் பணியாற்றுகின்ற மற்றும் அவ்வாறான தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ள தரப்பினரை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .