2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறந்த முதல் காலாண்டு நிதிப் பெறுபேறுகளுடன், யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சியைப் பதிவு

S.Sekar   / 2021 மே 07 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மை

யூனியன் வங்கி, 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியை உறுதியான நிதிப் பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ளது. இதனூடாக பெருமளவு எதிர்பாரப்புகளுடன் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

யூனியன் வங்கியின் பிரதான வங்கியியல் பெறுபேறுகள் என்பது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைப் பிரிவுகளின் முயற்சிகளினூடாக வலுவூட்டப்பட்டிருந்தது.  மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிலவிய சவால்கள் நிறைந்த சூழலிலும், வங்கி தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மீள வடிவமைத்து, வக்சீன் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதுடன் எழுந்த நேர்த்தியான பொருளாதார சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததனூடாக 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.

முதல் காலாண்டுக்கான வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் என்பது ரூ. 1521 மில்லியனாக பதிவாகியிருந்தது. சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலில் ஒட்டுமொத்த வருமானம் முன்னைய ஒப்பீட்டு காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) 985 மில்லியன் ரூபாயாக காணப்பட்டது. இது 2020 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒப்பீட்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிலவிய குறைந்த AWPLR பெறுமதிகள் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வட்டி வீதங்கள் குறைப்புடன் சகாயமான கடன் வழங்கல் திட்டங்கள் போன்றன இந்த வீழ்ச்சியில் பங்களிப்பு செலுத்தியிருந்தன. குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் கடனுக்கான கேள்வி எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அதிகரிக்கவில்லை. பொருளாதார செயற்பாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஒட்டுமொத்த கடன் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தன. இந்த சவால்கள் மத்தியிலும், தேறிய வட்டி வருமானத்தை நிர்வகிப்பதில் வினைத்திறன் வாய்ந்த இலாகா நிர்வாக தந்திரோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன.

மேம்படுத்தப்பட்ட தரகு வருமானம், நிகரக் கட்டணம் மற்றும் இதர தொழிற்படு வருமானம் ஆகியவற்றினூடாக இலாபகரத் தன்மை வலிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன், வங்கியின் தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம் என்பது 2021 முதல் காலாண்டு நிறைவில் 216 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இது ஒப்பீட்டுக் காலப்பகுதியுடன் கருதுகையில் 7% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இதில் வியாபார கடன்கள், கடன் அட்டைகள் மற்றும் வியாபாரங்களுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்கள் போன்றன பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தன.

வங்கியின் திறைசேரி பிரிவு முதல் காலாண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தது. வங்கியின் வருமானத்தில் முக்கிய பங்களிப்பை இந்தப் பிரிவு மூலதன மற்றும் பரிமாற்ற வருமதிகளின் அடிப்படையில் வழங்கியிருந்தது. வங்கியின் இதர தொழிற்பாட்டு வருமானம் என்பது 73% இனால் அதிகரித்திருந்தது. இதில் நாணயப் பரிமாற்று வீதங்களில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் பங்களிப்பு வழங்கியிருந்தன.

மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு வினைத்திறனுக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் செலவு நிர்வாக முயற்சிகளினூடாக, வங்கியின் தொழிற்பாட்டு செலவீனம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் குறைவடைந்து 907 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கான மதிப்பிறக்கத்திற்கு முன்னரான இலாபம் ரூ. 614 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23% அதிகரிப்பாகும்.

பாரிய பொருளாதார சூழலில் நிலவிய அழுத்தங்கள் மற்றும் மேலதிக முடக்கநிலைகளின் போதும் வங்கி மதிப்பிறக்க கட்டணங்களை செலுத்தியதுடன், அதன் பிரகாரம் காலாண்டுக்கான மதிப்பிறக்க கட்டணம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 111% இனால் அதிகரித்து ரூ. 196 மில்லியனாக பதிவாகியிருந்தது. நோக்குடனான மீட்சி முயற்சிகளுடன், மீளச் செலுத்தல்கள் மற்றும் கடன் வளர்ச்சி, நிகர தொழிற்படா கடன்கள் (NPL) விகிதம் ஒட்டு மொத்த மேம்படுத்தல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காணப்பட்ட 6.05% உடன் ஒப்பிடுகையில் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலாண்டில் 5.85% ஆக முன்னேறியிருந்தது.

காலாண்டுக்கான தொழிற்பாட்டு செயற்பாடுகளினூடான பெறுபேறுகள் ரூ. 418 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பாகும்.

துணை நிறுவனங்களின் உரிமையாண்மை பங்குகள் அடங்கலாக வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 282 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57% அதிகரிப்பாகும். வங்கியின் சார்பாக நேர்த்தியான தாக்கத்தையும், UB ஃபினான்ஸ் கம்பனியிலிருந்து வெளிப்பட்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட வரி சொத்து பதிவினால் எழுந்த மறைத் தாக்கத்தையும் இது பிரதிபலித்திருந்தது.

வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 137 மில்லியனாகும்.

வங்கியின் மொத்த சொத்துக்கள் 2021 மார்ச் 31 ஆம் திகதியன்று ரூ. 124,796 மில்லியனாக அதிகரித்திருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் 6% இனால் அதிகரித்து ரூ. 71,609 மில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர்கள் வைப்புகள் 2% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 83,829 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், நோக்குடனான கையகப்படுத்தல் தந்திரோபாயங்களுடன் விற்பனை, கூட்டாண்மை மற்றும் SME வங்கியியல் பிரிவுகள் பங்களிப்பை வழங்கியிருந்தன. இதன் பெறுபேறாக ஒட்டுமொத்த CASA மீதி 4.2% இனால் அதிகரித்ததுடன், CASA விகிதம் 30.5% ஆக காணப்பட்டது.

உறுதியான மூலதன விகிதங்களை பேணுவது நிர்வாகத்தின் முன்னுரிமையாக அமைந்திருந்தது. யூனியன் வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் 2021 மார்ச் 31ஆம் திகதி 15.88% ஆக காணப்பட்டது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட மிகவும் உயர்வானதாகும்.

வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் ஆகிய இரு துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமம் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 301 மில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54% அதிகரிப்பாகும்.

குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 131,305 மில்லியனாகும். இதில் 95% ஐ வங்கி கொண்டிருந்தது. குழுமம் ஆரோக்கியமான மொத்த மூலதன விகிதமான 15.97% ஐ காலாண்டின் இறுதியில் கொண்டிருந்தது.

செயற்பாட்டு பெறுபேறுகள்

வருடத்தின் ஆரம்பத்தில் சிறந்த அறிவிப்பாக, பெருமைக்குரிய ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல் நிதியியல் விருதுகள் 2020 இல் “இலங்கையின் சிறந்த நிதி முகாமைத்துவ வங்கி” எனும் விருதை வங்கி சுவீகரித்திருந்தது. யூனியன் வங்கி BizDirect எனும் நவீன நிதி முகாமைத்துவ தீர்வின் வெற்றிகரமான செயற்பாட்டை உறுதி செய்து இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை பிரிவுகளின் டிஜிட்டல் நிதி முகாமைத்துவ தேவைகளை பெருமளவு நிவர்த்தி செய்திருந்த யூனியன் வங்கி BizDirect இனால் வங்கியின் CASA மற்றும் கட்டண வருமான வளர்ச்சிக்கு 2021 இன் முதல் காலாண்டில் பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

வங்கியின் கூட்டாண்மை வங்கியியல் பிரிவு மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. கூட்டாண்மை கடன்கள் பிரிவு 13% இனால் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் வைப்புகள் பிரிவு 6% இனால் அதிகரித்திருந்தது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைப் பிரிவு நேர்த்தியான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. தந்திரோபாயமான கடன் வழங்கல் வழிமுறையினூடாக கடன் வளர்ச்சி 3% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. சொத்துக்கள் வளர்ச்சியில் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைப் பிரிவு உறுதியான பங்களிப்பை ஏற்படுத்தியதுடன், SME CASA இருப்பு அடங்கலாக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரத்தின் வளர்ச்சிக்கு கிளைமட்டத்திலிருந்தான கவனம் செலுத்துகை அதிகரித்திருந்தது.

சவால்கள் நிறைந்த சந்தை சூழ்நிலைகள் நிலவிய போதிலும், வங்கியின் வாடிக்கையாளர் பிரிவு என்பது வைப்புகள் வளர்ச்சியை பதிவு செய்ததுடன், உறுதியான CASA இலாகா விரிவாக்கமான 10% ஐயும் பதிவு செய்திருந்தது. குறைந்த வட்டிவீதச் சூழலின் போதும், வங்கியின் முன்னுரிமையளிக்கப்பட்ட புதிய கையகப்படுத்தல்கள் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டிருந்தன. வாடிக்கையாளர் சொத்துக்கள் பிரிவு, தொடர்ந்தும் விரிவாக்கமடைந்ததுடன், கடன் அட்டைகள் பிரிவின் வளர்ச்சி அடங்கலாக வங்கியின் நோக்குடனான முயற்சிகள் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. இலகு மீளச் செலுத்தலுக்காக நெகிழ்ச்சியான 0% தவணைமுறை திட்டங்களை கடன் அட்டை வழங்குவதுடன், மீதி மாற்றத் தெரிவுகள் மற்றும் விசேட புத்தாண்டு விலைக்கழிவுகள் 100 க்கும் அதிகமான விற்பனையாளர் பங்காளர் பகுதிகளில் வழங்கப்பட்டிருந்தன. புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கிலும், ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வெளிநாட்டு ஊழியர் பண அனுப்புகைகளை முன்னெடுக்கும் முயற்சியில் இணைந்து, வெஸ்டர்ன் யூனியன் பண அனுப்புகைகளுக்கு ஊக்குவிப்பு அன்பளிப்புச் சலுகை வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

வியாபார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மனித வளங்கள் மற்றும் செயற்பாடுகள் அமைந்திருந்தன. சந்தைப் போக்குகளுக்கு பொருந்தும் வகையில் செயன்முறைகள் மற்றும் வளங்கள் மீளமைப்புகளினூடாக செலவு முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியான ஊழியர் ஈடுபாட்டு நடவடிக்கைகளின் அங்கமாக, வங்கியினால் புதிய டிஜிட்டல் ஈடுபாட்டு மற்றும் ஒன்றிணைவு போர்டல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக ஊழியர்களுக்கு அவர்களின் இருப்பிடங்களிலிருந்தவாறே தம்மத்தியில் தொடர்பாடல்களை மேம்படுத்த முடிந்தது. 2020 ஆம் ஆண்டில் தனது 25 வருட பூர்த்தியை எய்திய யூனியன் வங்கி, 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஊழியர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

யூனியன் வங்கியின் வருடாந்த நிதி அறிக்கை 2020 “மீளநோக்கு, மீளமைப்பு, மீளுறுதி” எனும் தொனிப்பொருளில் 2021 பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்தது. சவால்கள் மத்தியில் முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு வங்கியின் அர்ப்பணிப்பை குறிப்பதாக இது அமைந்துள்ளது. வங்கியின் வருடாந்த பொது ஒன்று கூடல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மெய்நிகர் அமர்வாக சகல சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வங்கியின் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டை நாம் நேர்த்தியாக ஆரம்பித்துள்ளோம். ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை எய்துவதற்கு வங்கி கொண்டுள்ள திறனை வெளிப்படுத்துவதாக 1ஆம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்குகின்றோம். நுகர்வோர், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கூட்டாண்மை வங்கியியல் பிரிவுகளில் எதிர்பார்க்கப்படும் தந்திரோபாய வளர்ச்சியை எய்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். உறுதியான நிதிப் பின்புலத்துடன், நோக்குடைய தந்திரோபாயமான வியாபாரத் திட்டத்தைக் கொண்டு யூனியன் வங்கி தொடர்ந்தும் சந்தையில் காணப்படும் சவால்களுக்கு மத்தியில் வாய்ப்புகளை எதிர்கொண்டு முன்னேறுவதற்கு திட்டமிட்டுள்ளது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X