2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிங்கர் ஸ்ரீ லங்கா, DELL மடிக்கணினிகளுக்கு முதலிடம்

Gavitha   / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நுகர்வோர் விற்பனை வர்த்தக நாமமான சிங்கர் ஸ்ரீ லங்கா, DELL டெக்னொலஜிஸ் உடன் இணைந்து இலங்கையின் மடிக் கணனிகள் சந்தையில் 35.6% பங்கை தாம் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளன. இன்டர்நஷனல் டேட்டா கோர்பரேஷனினால் (IDC) அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் இந்த உயர்ந்த ஸ்தானத்தை தாம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன. இதனூடாக உள்நாட்டு மடிக் கணனிகள் சந்தையில் முதல் ஸ்தானத்தை சிங்கர் ஸ்ரீ லங்கா ஊடாக DELL பிடித்துள்ளன. அண்மையில் இலங்கையின் முதல் தர கணனி விற்பனையாளர் எனும் நிலையை சிங்கர் எய்தியிருந்ததைத் தொடர்ந்து இந்த நிலையை எய்தியுள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் Dell நுகர்வோர் மடிக் கணனிகளின் பிரதான விநியோகத்தர்களில் ஒன்றாக சிங்கர் திகழ்வதுடன், Dell ஸ்ரீ லங்காவின் வருமானத்தில் 70 சதவீத பங்களிப்பை சிங்கர் வழங்குகின்றது. Dell இன் இதர விற்பனைப் பங்காளர்கள் எஞ்சிய 30 சதவீதத்தை தம்வசம் பகிர்ந்துள்ளனர்.

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “Dell இன் தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் பரந்தளவு தயாரிப்பு தெரிவுகள் போன்றவற்றினூடாக உலகளாவிய ரீதியில் முன்னணி நாமமாக நிலைத்துள்ளது. நாட்டில் ஒப்பற்ற முதல்தர கணனி விற்பனையாளராக சிங்கரைச் சேர்ந்த நாம் தெரிவாகியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பெற்றுக் கொடுப்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றோம். நுகர்வோர் மடிக் கணனி சந்தைப் பகுதியில் உயர்ந்த ஸ்தானத்துக்கு வளர்ச்சியடைந்துள்ளமையானது, எமது பரந்தளவு தயாரிப்பு தெரிவுகளை வழங்குவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.” என்றார்.

சவால்கள் நிறைந்த சந்தைச் சூழ்நிலைகளிலும், சிங்கரின் உறுதியான வளர்ச்சியில், வீடுகளிலிருந்து பணியாற்றுவது மற்றும் கல்வியைத் தொடர்வது போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருந்தமை பங்களிப்பு வழங்கியது. தொற்றுப் பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றல் மற்றும் கல்வியைத் தொடர்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மடிக் கணனிகள் பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளது. 

எவ்வாறாயினும், ஏனைய வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடுகையில் Dell மடிக் கணனிகளை அதிகளவு தெரிவு செய்வதனூடாக, இந்த வர்த்தக நாமத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ள தயாரிப்புகளை நாடுகின்றமையையும் உணர்த்துகின்றது.  சந்தையில் காணப்படும் இதர போட்டியாளர் வர்த்தக நாமத் தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு நிகராக Dell மடிக் கணனிகள் கவர்ச்சிகரமான விலையில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான விநியோக செயற்பாடுகளுக்கான (வாடிக்கையாளர் மற்றும் நிறுவனங்கள்) தலைமை அதிகாரி அபித் அஸ்லம் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் முதற்தர மடிக் கணனிகள் தெரிவாக நாம் காணப்படுவதையிட்டும், குறிப்பிடத்தக்களவு சந்தை வாய்ப்பை சிங்கர் ஸ்ரீ லங்கா போன்ற பங்காளர்களின் உதவியுடன் எய்த முடிந்ததையிட்டும் நாம் மிகவும் திருப்தியடைகின்றோம். கடந்த காலங்களில் எமது பங்காண்மையினூடாக சிறந்த பெறுபேறுகளை எம்மால் எய்தக்கூடியதாக இருந்ததுடன், அதனூடாக உயர்ந்த ஸ்தானத்தை எய்தவும் முடிந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாம் ஒப்பற்ற வினைத்திறனை நாம் வெளிப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்கள் தங்கியிருக்கக்கூடிய பெறுமதிகளையும் வழங்குகின்றோம்.” என்றார். 

வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் பெருமளவு தெரிவுகளை Dell வழங்குகின்றது. ஆரம்ப விலை ரூ. 64,799 ஆக காணப்படுவதுடன், 2020 ஆம் ஆண்டின் சிறந்த மடிக் கணனி விருது வென்ற XPS13 தெரிவுகள் மற்றும் இதர கேமிங் மடிக் கணனிகளும் காணப்படுகின்றன. Dell இன் புத்தாக்கமான உள்ளக மென்பொருளான ‘Dell Mobile Connect’ ஊடாக, பாவனையாளரின் மடிக் கணனி மற்றும் ஸ்மார்ட்ஃபோனை இணைக்க முடியும். இதனூடாக, வாடிக்கையாளர்கள் உயர் தரமான, செலுத்தும் பணத்துக்கு பெறுமதி வாய்ந்த தயாரிப்பை பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்படுகின்றது.

Dell இன் இந்த உயர்ந்த ஸ்தானத்தை எய்துவதில், சிங்கரினால் வழங்கப்படும் கவர்ச்சிகரமான இலகு தவணை முறைக் கொடுப்பனவு வசதிகள், கடன் அட்டை சலுகைகள், விலைக்கழிவுகள் மற்றும் மாணவர்களுக்கான விசேட சலுகைகள் போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. மேலும், அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த நுகர்வோர் மடிக் கணனி சந்தையில், சிங்கரினால் வழங்கப்படும் வாடகைக் கொள்வனவு வசதிகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு மடிக் கணனி ஒன்றை மிகவும் சகாயமான விலையில் கொள்வனவு செய்ய முடிகின்றது. இதுவும் Dell இன் சந்தை பங்கு வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் உத்தரவாதம், தற்போது நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்தர சேவை நியமங்கள், மேம்படுத்தப்பட்ட e-வணிக கட்டமைப்பான www.singer.lk ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிகின்றமை மற்றும் நாடளாவிய ரீதியில் 400க்கும் அதிகமான காட்சியறைகளில் தயாரிப்புகளை கொள்வனவு செய்ய முடிகின்றமை போன்றன செலுத்தும் பணத்துக்கு அதிகளவு பெறுமதி சேர்ப்பதாக அமைந்துள்ளன.

வெற்றிகரமாக இயங்குவது எனும் பகிரப்பட்ட நோக்கத்துக்கமைய செயலாற்றும் சிங்கர் மற்றும் Dell ஆகியன தொடர்ந்து கைகோர்த்து தமது சந்தைப் பங்கை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் இயங்கி, உயர் வருமானமீட்டி, நாட்டில் துறைசார் முன்னோடியான தொழில்நுட்பத்தையும் சேவைகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .