2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிங்ஹ சீமெந்து புதிய இலச்சினை மற்றும் பொதி அறிமுகம்

Editorial   / 2018 ஜூலை 18 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

Heidelberg சீமெந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான சிங்ஹ சீமெந்து, தனது புதிய இலச்சினை மற்றும் பொதி ஆகியவற்றை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தில் இந்த அறிமுகத்தை சிங்ஹ சீமெந்து மேற்கொண்டிருந்தது.Heidelberg சீமெந்து குழுமத்தின் துணை நிறுவனம் எனும் அடிப்படையில், தாய் நிறுவனத்தின் ஆய்வுகள், அபிவிருத்தி, தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு சிங்ஹ சீமெந்தால், உயர் தரம் வாய்ந்த பொருட்கள் சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன.  

சிங்ஹ சீமெந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரன் ரெட்கார் கருத்துத் தெரிவிக்கையில், “Heidelberg சீமெந்து என்பது, அதன் வாடிக்கையாளர் அடிப்படையிலான அம்சங்கள், சேவைத்தரம்,  தொடர்ச்சியான மேம்பாட்டு அம்சங்கள் போன்றவற்றுக்காக புகழ்பெற்றுத் திகழ்கிறது. இலங்கையை பொறுத்தமட்டில், சிங்ஹ சீமெந்து உயர் சர்வதேச நியமங்களுக்கு நிகரான தயாரிப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் அர்ப்பணிப்புக்கமைய இயங்கி வருகிறது” என்றார்.  

SLSI பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்களிடமிருந்து சாதாரண போர்ட்லன்ட் சீமெந்தை, சிங்ஹ சீமெந்து இறக்குமதி செய்து, சந்தையில் ‘சிங்ஹ’ எனும் வர்த்தக அடையாளத்தில் விற்பனை செய்கிறது. உயர்தரம் வாய்ந்த பொருட்கள் எனும் உறுதிமொழிக்கமைய திகழ்வது என்பதற்கு மேலாக, சிங்ஹ சீமெந்தால் நாடளாவிய ரீதியில் தடங்கலில்லாத விநியோகம், மொத்த வியாபாரிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.  

18 ஆம் நூற்றாண்டில் தனது உற்பத்தி செயற்பாடுகளை Heidelberg சீமெந்து ஆரம்பித்திருந்தது. ஜொஹான் பிலிப் ஸ்கிஃவ்பர்டெகர் என்பவர் Heidelberg பகுதியில் திவாலாகியிருந்த (bankrupt) ஆலையை 258,000 கோல்ட் மார்க்களுக்குக் கொள்வனவு செய்து, அதைப் போர்ட்லன்ட் சீமெந்து தொழிற்சாலையாக மாற்றியிருந்தார். நிறுவனம் (பின்னர் Heidelberg சீமெந்து என பெயர் மாற்றப்பட்டிருந்தது)ஆரம்பத்தில் 35 ஊழியர்களைக் கொண்டிருந்தது. இன்று, நிறுவனத்தில் மொத்தமாக 59,000 ஊழியர்கள், 60 க்கும் அதிகமான நாடுகளில் 3030 பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். (இணை நிறுவனங்களும் அடங்கலாக) இதன் 159 சீமெந்து மற்றும் அரைக்கும் ஆலைகள் ஐந்து கண்டங்களிலும் பரந்து காணப்படுவதுடன், 195 மில்லியன் தொன் சீமெந்தை வருடாந்தம் உற்பத்தி செய்கிறது.  

ரெட்கர் கருத்துத் தெரிவிக்கையில், “நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளுக்கு மேலதிகமாக, உற்பத்தியில், ஊழியர், நிர்வாகம், சமூகப் பொறுப்புகளை எய்துவது போன்றவற்றில் உயர் தரத்தை பேணுகிறோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X