2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சியெட் விநியோகஸ்தர்களுக்கு ஊக்குவிப்பு

Editorial   / 2018 மே 24 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்ள டயர் விநியோகஸ்தர்களுடனான தனது உறவுகளை ஒரு புதிய மட்டத்துக்கு மேம்படுத்தி உள்ளதாக சியெட் அறிவித்துள்ளது. தமது விநியோகஸ்தர்கள் இந்த வர்த்தக முத்திரையின் விற்பனையை ஊக்குவிக்கும் அளவுக்கு அவர்களுக்கான வெகுமதியை விகிதாசார அளவில் வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஓர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இந்தத் துறையில் இவ்வளவு விரிவான முதலாவது ஊக்குவிப்புத் திட்டம் இதுவே என நம்பப்படுகின்றது. நான்கு அடுக்குக் கொண்ட இந்த ‘சியெட் பிரிவிலேஜ் கிளாஸ்’ ஊக்குவிப்புத் திட்டம் விநியோகஸ்தர்களைத் தூண்டி, அவர்கள் மேலும் தமது இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல வழிவகுக்கின்றது. இதன்படி விற்பனையை அவர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கான வெகுமதியும் அதிகரிக்கும்.  

2016 - 2017இல் ஐந்து பில்லியன் முதலீட்டின் மூலம் பத்து பில்லியனுக்கும் அதிகமான தொகையை வருமானமாகத் திரட்டிய இலங்கை - இந்திய கூட்டு முயற்சியான சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம், இலங்கையின் மொத்த டயர் தேவையில் சுமார் அரைவாசியை உற்பத்தி செய்கின்றது. தற்போது உள்ள உற்பத்தி வகைகளை இரட்டிப்பாக அதிகரித்து, புதிய டயர் வகைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் மேலும் மூன்று பில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது.  

விநியோகஸ்தர்களின் விசுவாசத்துக்கு மீள் சக்தி அளிக்கும் வகையிலான இந்தத் திட்டம் பற்றிக் கருத்து வெளியிட்ட சியெட் களனி முகாமைத்துவப் பணிப்பாளர் ரவி தத்லானி, “எமது விற்பனைச் செயற்பாட்டில் விநியோகஸ்தர்கள் எப்போதுமே பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இருந்து வருகின்றனர். எமது வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்பை அங்கிகரிக்கும் வகையில், வருடாந்த வெகுமதிகள் வழங்கல் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் என்பன இடம்பெறுகின்றன. இந்தக் கட்டமைப்பு ரீதியான விசுவாச ஊக்குவிப்புத் திட்டமானது, இந்த உறவுமுறையை மேலும் வலுப்படுத்துவதில், நாம் எந்தளவு பாரதூரமாகக் கவனம் செலுத்துகின்றோம் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்தோடு அவர்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் உயர் வெகுமதி எப்போதும் அவர்களுக்காகக் காத்திருக்கின்றது என்பதையும் இது புலப்படுத்துகின்றது” என்று கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .