2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த Biz Club அறிமுகம்

Editorial   / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (SME) கொமர்ஷல் வங்கி விரிவான வலையமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கிலும் ஏனைய பல நன்மைகளை வழங்கும் வகையிலும் Biz Club ஐ (வர்த்தக கழகத்தை) அறிமுகம் செய்துள்ளது.  

இந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ்வகை கழகங்களில் இது முதலாவதாகும். புதிய வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் SME வாடிக்கையாளர்களை ஒருங்கிணைப்பதில் இந்தப் புதிய Biz Club கவனம் செலுத்தும். அதன் மூலம் கடன் வழங்கலுக்கு அப்பாற்பட்ட ஆதரவுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.  

இந்த Biz Club அறிமுகம் பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.ரெங்கநாதன் “வளர்ந்து வரும் எமது வர்த்தக அமைப்புக்கள் எமது பொருளாதாரத்துக்கு செலுத்தி வரும் அளப்பரிய பங்களிப்பை கொமர்ஷல் வங்கி நன்கு உணர்ந்துள்ளது. வருங்காலத்தில் இந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளே நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சி அடையவுள்ளன. இன்றைய வளர்ச்சி அடைந்து வரும் வர்த்தக நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைப்பதும் அவற்றை உலகின் பெரிய வர்த்தக நிறுவனங்களோடு தொடர்பு படுத்தும் ஒரு முயற்சிதான் இந்த Biz Club. அத்தோடு ஒரே விதமான சிந்தனை கொண்ட சமூகத்தோடு தொடர்பு படுவதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கவும் இது வழியமைக்கின்றது. தேசிய பொருளாதாரத்துக்கு SME க்கள் வழங்கும் அளப்பரிய பங்களிப்பை அங்கிகரித்து கௌரவிப்பதும் எமது நோக்கமாகும்” என்றார்.  

நான்கு வகை அங்கத்துவங்கள் இதில் வழங்கப்படவுள்ளன. பிரீமியர், பிளேட்டினம், தங்கம் மற்றும் வெள்ளி என அங்கத்துவம் அமையவுள்ளது. வெவ்வேறு SME வாடிக்கையாளர் தேவைகளை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான வித்தியாசமான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் நோக்கில் இந்த அங்கத்துவ வகைப்படுத்தல் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரிவுக்கும் தேவையான உதவிகளை முறைப்படி வழங்க இது உதவியாக அமையும். அத்தோடு இந்த வர்த்தக முயற்சிகளை வலுவூட்டி அவற்றை மேம்படுத்தவும் இந்த வகைப்படுத்தல் உதவியாக அமையும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X