2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு ஜினசேன உதவி

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜினசேன பிரைவட் லிமிட்டெட், நாட்டில் சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவியுள்ளது.   

இலங்கையில் பாரிய நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள ஜினசேன, பணிப்பாளர் சபைத் தலைவரான ரொஹான் ஜினசேனவின் குறிக்கோளுக்கு அமைவாக 2005 ஆம் ஆண்டில் இந்த விசேட துறையில் கால்பதித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வடமத்திய, கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் CKD வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பல்வேறுபட்ட ஸ்தாபனங்களின் 200 இற்கும் மேற்பட்ட நீர்ச் சுத்திகரிப்பு ஆலை செயற்திட்டங்களை வெற்றிகரமாக நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் 100 இக்கும் மேற்பட்ட செயற்திட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளதுடன், தற்போது 88 செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஒவ்வொரு நீர் சுத்திகரிப்பு ஆலை மூலமாகவும் 300 வரையான குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு வருவதுடன், இதுவரையில் நாடெங்கிலும் 25,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை நிறுவனம் வெற்றிகரமாக வழங்கியுள்ளது.  

 பிரதானமாக மூன்று தரப்பினரின் அமுலாக்க நடவடிக்கைகளுக்காக ஜினசேன நிறுவனத்தின் அனைத்து நீர்ச் சுத்திகரிப்பு ஆலைச் செயற்திட்டங்களும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாட்டில் CKD வியாதியைத் துடைத்தெறிவதை முன்னின்று வழிநடாத்திச் செல்கின்ற இலங்கை அரசாங்கம் அதில் முதலாவதாகும்.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வர்த்தக சமூக நலன்புரிச் செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாக CKD வியாதிக்கு எதிராகப் போராடுகின்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கின்ற நாட்டிலுள்ள பெரும் வர்த்தக நிறுவனங்கள் அவற்றில் இரண்டாவதாகும்.

நாட்டில் தமது அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுடன் இணைந்து CKD வியாதிக்கு எதிராகப் போராடுவதற்காக இணைந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் அவற்றில் மூன்றாவதாகும். மேலும், முப்படைகளின் முகாம்களிலும் நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவனம் நிறுவியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .