2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களின் விளையாட்டுத் திறமைகளை இனங்காணும் SportUnleash அறிக்கை

Gavitha   / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, சிறுவர்கள் வீடுகளிலேயே இருப்பதுடன், ஒன்லைன் ஊடாக தமது கற்றல்களை மேற்கொள்கின்றனர். உடல் ரீதியான செயற்பாடுகள் இன்மை காரணமாக, அவர்கள் அதிகளவு உடற்பருமனடைந்து, ஆரோக்கியமற்றவர்களாக மாறி வருகின்றனர். கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பிக்கும் முன்பிருந்தே, பாடசாலைகளில் சிறுவர்களுக்கு உடல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது மிகவும் குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக பாடசாலைக் காலத்தில் ஏதேனும் ஒரு வகையான விளையாட்டுக்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்கள் தொகையில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகியிருந்தது.

இதற்கு பிரதான காரணம், பல பிள்ளைகள் தமக்கு பொருத்தமற்ற விளையாட்டில் தம்மை ஈடுபடுத்தி, சில வருடங்களின் பின்னர் அந்த விளையாட்டில் ஈடுபாடு குறைவடைந்து, அதிலிருந்து தம்மை விலக்கிக் கொள்கின்றனர். சுகாதார அனுகூலங்களுக்கு மேலதிகமாக, தமது பாடசாலை காலம் முழுவதிலும் விளையாட்டில் ஈடுபடும் பிள்ளை ஒன்றுக்கு, கிடைக்கும் விருத்தி என்பது மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த அனுகூலத்தை சில பெற்றோர்கள் மாத்திரமே உணர்ந்து கொண்டுள்ளதுடன், விளையாட்டில் ஈடுபட பிள்ளையை ஊக்குவிக்கின்றனர்.

விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு தமது உயர் கல்வியில் சிறப்பாக சித்தியடைய முடிவதுடன், வளர்ந்து பெரியவர்களானதும், தமது தொழில் வாழ்க்கையிலும் வெற்றிகரமாக இயங்க முடிந்துள்ளது என்பது ஆய்வினூடாக கண்டறியப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம், விளையாட்டுக்களில் ஈடுபடாத மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை தவிர்ப்பது மற்றும் உயர் கல்வியை பூர்த்தி செய்வதை தவிர்ப்பதில் அதிகளவு பங்கை வகித்திருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டில் Fortune 500 நிறுவனங்களின் 75 நிறைவேற்று உப தலைவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 95 சதவீதமானவர்கள் தமது உயர் பாடசாலையில் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. 400 கூட்டாண்மை பெண் நிறைவேற்று அதிகாரிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 94 சதவீதமானவர்கள் விளையாட்டொன்றில் ஈடுபட்டதுடன், அந்த அனுபவம் தமது வெற்றிகரமான செயற்பாட்டில் பங்களிப்பு வழங்கியிருந்ததாக அதில் 61 சதவீதமானவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சிறுவர்கள் 20 வயதை பூர்த்தி செய்யும் வரை, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுவது அவர்களின் தலைமைத்துவ பண்பை ஊக்குவிப்பதுடன், சுய நம்பிக்கையை கட்டியெழுப்பி, சுய மதிப்பை ஏற்படுத்துகின்றது. குழுநிலைச் செயற்பாடு, அழுத்தமான தருணங்களில் எவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது, இலக்குகளை நிர்ணயிக்கும் திறன்களை மேம்படுத்துவது மற்றும் அவற்றை எவ்வாறு எய்துவது, வெற்றியை எவ்வாறு அமைதியாக கொண்டாடுவது மற்றும் தோல்வியை எவ்வாறு தாங்கிக் கொள்வது போன்ற பண்புகளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட SportUnleash இனால், சிறுவர்களின் விளையாட்டுத் திறமையை எதிர்வுகூற முடியும் என்பதுடன், தமது பாடசாலைப் பருவத்தின் உச்ச நிலையில், தமது முழுத்திறமைகளையும் வெளிக்கொணர்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். சிறுவர்களுக்கு 9 – 11 வயது காணப்படும் போது மாத்திரமே இந்த ஆய்வை மேற்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .