2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாத யாத்திரிகர்களுக்கு 4reverஇன் குளிக்கும் பகுதிகள்

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

4rever,  தனது கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் பிரகாரம், சிவனொளிபாத மலைக்கு தல யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களின் நலன் கருதி அவர்களுக்கு புத்துணர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பெண்களுக்கு 15, ஆண்களுக்கு 15 என மொத்தம் 30 குளியல் பகுதிகளை நிறுவியுள்ளது. 

மலையேறும் யாத்திரிகர்கள் நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே களைப்பை போக்குவதற்காக புத்துணர்ச்சி பெற்றுக்கொள்ளும் பொருட்டு சீதாகங்குலவில் ஸ்நானம் செய்து கொள்ளும் இடத்திலேயே தற்போது இந்த குளியல் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்நானம் செய்யும் யாத்திரிகர்களின் தனிமை பாதுகாப்பு, ஆடைமாற்றல் ஆகியவற்றுக்காக தனித்தனி பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சீதாகங்குலவின் எதிர்த் திசையில் மாசற்ற அருவியிலிருந்து குளியலறைக்கான நீர் பெற்றுக் கொள்ளப்படுகிறது. உடைந்த கண்ணாடித் துண்டுகள் பிளாஸ்டிக் துண்டுகள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதால் ஸ்நானம் செய்யும் வயது முதிர்ந்த மற்றும் இளம் யாத்திரிகர்கள் பாதுகாப்பான நீர்நிலைகளை தேடிச் செல்வது இதனால் தவிர்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் தொடர்ச்சியான கவனிப்பால் அப்பகுதி ஒழுங்காக சுத்தம் செய்யப்படுவதால் அதன் இயற்கை அழகில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. யாத்திரைக் காலம் முழுவதிலும் உடுவப் முழுமதி தினத்திலிருந்து வெசாக் முழுமதி தினம் வரை 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

4rever Skin Naturals ஸ்தாபகரும் தலைவருமான திருமதி சந்தனி பண்டார திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “இயற்கையுடன் இணைந்து செல்வதோடு அதனால் அனுகூலமும் பெறும் ஒரு கம்பனி என்ற வகையில், இதனை பாதுகாப்பது எமது கடமையும் பொறுப்புமாகும் என்று கருதுகிறேன். ஏதாவதொரு வகையில் எம்மால் முடிந்த அளவில் சிவனொளிபாத மலைக்கு ஏறும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக நாம் கருதுகிறோம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .