2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுபீட்ச சுட்டி உயர்வு

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சுபீட்ச சுட்டி (SLPI) 2017இல் 0.771 ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பெறுமதி 2016இல் 0.661 ஆக பதிவாகியிருந்தது. ‘பொருளாதாரம் மற்றும் வியாபார சூழ்நிலை’ மற்றும் ‘சமூக பொருளாதார உட்கட்டமைப்பு’ போன்ற உப சுட்டிகளின் பங்களிப்புடன் இந்தப் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார, வியாபார சூழ்நிலை உப சுட்டி 2017 இல் உயர்ந்திருந்தது. இதில், தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி அதிகரித்திருந்தமை, தொழில் வாய்ப்புகளுடன் தொடர்புடைய ஏனைய மேம்படுத்தல்கள் போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தது.

சமூக பொருளாதார உட்கட்டமைப்பு எனும் உப சுட்டியை பொறுத்தமட்டில், அதிவேக நெடுஞ்சாலைகள், பாலங்கள் நிர்மாணம் மற்றும் மேம்பால திட்டங்கள் போன்ற வீதி வலையமைப்புக்கான மேம்படுத்தல்கள் மற்றும் மின்சார வசதி மற்றும் குழாய் நீர் வசதி மேம்படுத்தப்பட்டிருந்தமை போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன.

இருந்த போதிலும் பொது மக்கள் நலன் உப சுட்டி 2017இல் வீழ்ச்சியடைந்திருந்தது. இதில் சூழல் மற்றும் வளி தூய்மை மட்டம் குறைந்திருந்தமை பங்களிப்பை வழங்கியிருந்தது. சுகாதார வசதிகள், கல்வி வசதிகள், மக்களின் செல்வம் மற்றும் விநோதமூட்டும் விடயங்களில் அவர்களின் ஈடுபாடு போன்றவற்றில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .