2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு தனியார் வானூர்தி சேவை விஸ்தரிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நாச்சியாதீவு பர்வீன்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிப்பதற்கு வழிகோலும் வகையிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையிலும்  உள்ளூர் வானூர்த்தி சேவையை புதிய தொழிநுட்பங்களுடன்  நவீனமயப்படுத்தி விஸ்தரிப்பதற்கு ஐ.டப்லியூ.எஸ் (IWS) விமான சேவைகள் நிறுவனம் முன்வந்துள்ளது. 

இதற்காக ஐம்பது பேர் பயணிக்கக்கூடிய விமானமொன்றை பிரஸ்தாப நிறுவனம் கொள்வனவு செய்து குறைந்த செலவில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இந்நிறுவனம் விமான சேவையுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளினதும் முதலீட்டாளர்களினதும் நன்மை கருதி கனேடிய தயாரிப்பான பெல் 505 ஜெட் x ரகத்தைச் சேர்ந்த நவீன உலங்குவானூர்தி ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளது. இந்த நிறுவனம்  ஏற்கெனவே இரண்டு உலங்கு வானூர்திகளை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

உலகப்பிரசித்தி பெற்ற பெல் ஹெலிகப்டர் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து ஐ.டப்லிவ்.எஸ் விமான சேவைகள் நிறுவனம்  கொள்வனவு செய்துள்ள மேற்படி உலங்குவானூர்தியின் வெள்ளோட்ட நிகழ்வு வெலிசரையில் அமைந்துள்ள இந்த நிறுவனத்துக்கு சொந்தமான வானூர்த்தி தளத்திலிருந்து அண்மையில் அதன் தலைவர் ஆர்தர் சேனாநாயக்க மற்றும் சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்,ஜெவ்பர் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த வெள்ளோட்ட நிகழ்வில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.எச். டயஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் ஆகியோர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் கருத்து தெரிவித்த சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்,ஜெவ்பர் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதானால் உள்ளூர் விமானசேவை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும், யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் தற்போது பத்து உள்ளூர் விமான நிறுவனங்கள் தமது சேவையை நடாத்திவருவதுடன் இவற்றில் ஆறு நிறுவனங்கள் வானூர்த்தி சேவையையும் நான்கு நிறுவனங்கள் விமான சேவையையும் நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றில் இரண்டு  நிறுவனங்கள் நாளாந்தம் உள்ளூர் பயணிகள் விமான 
சேவையில் ஈடுபட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .