2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சூழல் நேய கடன் திட்டம்-II; செலான் வங்கியின் உதவிக்கரம்

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புவி வெப்பமடைதல் மற்றும் காபன் வெளியீட்டை குறைத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிகளவு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், நிலைபேறான தொழிற்றுறை அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு தொழிற்றுறைகளை ஊக்குவிப்பதற்கான பரந்தளவு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.  

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அழைப்பை ஏற்று, செலான் வங்கி இவ்வாறான செயற்திட்டமொன்றில் கைகோர்த்துள்ளது. தகைமை வாய்ந்த தொழிற்றுறைகளுக்கு கடனாகச் சுழற்சி நிதித் திட்டமாக, இந்த உதவி வழங்கப்படுவதுடன், இதனூடாகச் சூழலுக்கு நட்பான தொழிற்றுறை சூழலை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.   

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பின் பிரகாரம், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு நாட்டில் தொழிற்துறை அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. இதில், சூழலுக்கு நட்பான தொழிற்றுறை மயமாக்கல் என்பது சிறிய,  நடுத்தரளவு வியாபாரங்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் விடயமாக அமைந்துள்ளது.  

இந்தக் கடன்களினூடாக, தொழில்முயற்சியாளர்களுக்குச் சூழல்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய தொழிற்றுறைசார் மாசுளைக் குறைத்தல், கழிவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளல், வளங்களை மீட்டல், சேமிப்பு, மாசு கட்டுப்படுத்தல்,  செலவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அதனுடன்  தொடர்புடைய வடிவமைப்பு, வலு நுகர்வு, சூழல் சார் மேம்படுத்தல் நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.  

ஒரு விண்ணப்பத்துக்காக வழங்கப்படும் ஆகக்கூடிய கடன் தொகை ரூ. 30,000,000 ஆக அமைந்துள்ளதுடன், மீளச் செலுத்தும் காலம் 120 மாதங்களாகும் (10 வருடங்கள்). இதில் 24 மாதங்கள் (2 வருடங்கள்) சலுகைக் காலமும் அடங்கியுள்ளது. சூழல் நேய கடன் திட்டம் II - சுழற்சி நிதித் திட்டத்துக்கான வட்டி வீதம் வருடமொன்றுக்கு 6.5% ஆக அமைந்துள்ளது. 100 சதவீதம் மீள் நிதியளிப்புடன் மொத்த செயற்திட்ட செலவில் 25 சதவீதத்தை வாடிக்கையாளர் பங்களிப்பு செய்ய வேண்டும்.  

திட்டத்தின் நிறைவின் போது, எந்தவோர் உற்பத்தி அல்லது தொழிற்துறைசார் வியாபாரத்துக்கும், காணி,  கட்டடம் (உரிமையாண்மை அல்லது குத்தகைக்கு பெற்றமை) தவிர்ந்த நிலையான சொத்துகளின் அசல் முகப் புத்தகப் பெறுமதி 250 மில்லியன் ரூபாய்க்கு அதிகரிக்காமலிருத்தல் வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .