2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

செலான் ‘Travel the Island’ ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரயாணங்களுக்கும் ஓய்வு நேரத்தை செலவிடவும் பெறுமதி சேர்க்கும் வகையில், செலான் அட்டை ‘Travel the island’,ஊடாக வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சேமிப்புகளையும் சௌகரியமான கொடுப்பனவு திட்டங்களையும் பிரத்தியேகமான வெகுமதிகளையும் வழங்க செலான் அட்டை (Seylan Cards) முன்வந்துள்ளது.

இலங்கையின் மிகவும் பிரபல்யமான பகுதிகளுக்கு பயணிக்கும்போது வாடிக்கையாளர்கள் இந்த அனுகூலங்களையும் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.  

செலான் அட்டை உடன் ‘Travel the island’ என்பது அட்டை உரிமையாளர்களுக்கு நாடு முழுவதையும் சேர்ந்த சுற்றுலாப்பகுதிகளை தெரிவுசெய்து கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.

இதனூடாக அவர்களுக்கு உரித்தான பிரத்தியேகமான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும். 50க்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்கள் ஆகியவற்றுடன் வங்கி கைகோர்த்துள்ளது. 

நாடு முழுவதையும் சேர்ந்த வெவ்வேறு பகுதிகளுக்கு வாடிக்கையாளர்கள் பயணம் செய்து மகிழ்ச்சியாகவும் விறுவிறுப்பாகவும் குதூகலமாகவும் தமது பொழுதை செலவிட வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், 50சதவீதத்துக்கும் அதிகமான சேமிப்பையும் கொடுக்கின்றது.   

இந்த அனுபவம் தொடர்பில் செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி காமிக டி சில்வா கருத்துத்தெரிவிக்கையில், “பயணம் மற்றும் தங்குமிட செலவீனங்கள் போன்றன பிரயாணம் செய்ய எதிர்பார்க்கும் நபர்களுக்கு தமக்கு பிடித்த பகுதிகளுக்கு பயணம் செய்வதில் இரு தடவைகள் சிந்திக்க வைக்கின்றன. இந்த ஆர்வங்களை நாம் புரிந்து கொண்டு, ‘travel the island’ என்பதை நாம் வடிவமைத்திருந்தோம். கார்ட் உரிமையாளர்களுக்கு பெருமளவான சேமிப்புகளை பெற்றுக்கொடுத்து, நாட்டின் எப்பகுதியிலும் பயணம் செய்வதற்கு வாய்ப்பளிக்கும். வடக்கு பகுதிக்கு பயணம் செய்வதாக இருக்கட்டும், தென் பகுதியின் கடற்கரையோரங்களில் ஓய்வெடுப்பதாக இருக்கட்டும், அல்லது தென்கிழக்கு பகுதிகளாக இருந்தாலும், எமது வங்கி உரிய பங்களிப்பை வழங்குவதோடு, உள்நாட்டு பாரம்பரியத்தை ஊக்குவிப்பது தொடர்பில் பங்களிப்பு வழங்கும். நாட்டின் முன்னணி ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை சேர்க்க‘Travel the island’ முன்வந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை தரத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்வது முதல் வாழ்க்கைத்தரத்தில் புதிய நிலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்” என்றார்.  

செலான் அட்டை வாடிக்கையாளர்கள் தற்போது தமது வேலைப்பழு நிறைந்த வாழ்க்கையிலிருந்து, ஓய்வான பகுதியை நோக்கி பயணிக்கக்கூடியதாக இருக்க முடியும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .