2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செலான் டிக்கிரி கணக்கினால் அன்பளிப்புகள் அறிமுகம்

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாவருடம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்த செலான் வங்கியின் ‘டிக்கிரி புதிய தவணை ஊக்குவிப்பு’ திட்டத்தின் ஊடாக இந்த ஆண்டும், தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாகப் பல வியப்பூட்டும் அன்பளிப்புகளைச் சிறுவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.

இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் பரந்தளவு அன்பளிப்புகள் உள்ளடங்கியிருக்கும் என்பதுடன் 2018இல் தமது புதிய கல்வியாண்டை ஆரம்பிக்கும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும்.  

முன்னைய ஆண்டுகளின் வெற்றிகரமான செயற்பாட்டை தொடர்ந்து, ‘டிக்கிரி புதிய பாடசாலை தவணை ஊக்குவிப்பு’ திட்டத்தில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் 12 வயது நிரம்பிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தில் பங்கேற்று, பெறுமதியான பரிசுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை செலான் வங்கி வழங்கியுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் நடைபெறும் இந்தத்திட்டத்தினூடாக வழங்கப்படும் அனுகூலங்களைச் சகல செலான் வங்கிக் கிளைகளிலும் புதிய மற்றும் ஏற்கெனவே கணக்குகளை வைத்திருப்போர் பெற்றுக்கொள்ளலாம்.

7,500 ரூபாய் வைப்புக்கும் டிக்கிரி வர்த்தக நாமம் பதிக்கப்பட்ட குடை பரிசாக வழங்கப்படுவதுடன், 5,000 ரூபாய் வைப்புக்கு மழைக்காப்பு அங்கியைச் சிறுவர்கள் பெறலாம். 10,000 ரூபாயை வைப்புச்செய்யும் போது, இந்த இரு பரிசுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

10,000 ரூபாய்க்கு அதிகமான வைப்புகளுக்கு, செலான் வங்கி வீடியோ கேம்கள், மக், தண்ணீர் போத்தல்கள் மற்றும் பாடசாலை பைகள் போன்றவற்றையும் வழங்க செலான் வங்கி முன்வந்துள்ளது.  

டிக்கிரி புதிய பாடசாலை, தவணை ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மேலதிகமாக, டிக்கிரி சிறுவர்களுக்கு சைக்கிள்கள், ரிமோட் ஹெலிகொப்டர்கள், ஸ்கூட்டர்கள், LED தொலைக்காட்சிகள் மற்றும் பல கவர்ச்சிகரமான அன்பளிப்புகளைப் புதிய டிக்கிரி கணக்கொன்றை ஆரம்பித்து அல்லது ஏற்கெனவே காணப்படும் கணக்கொன்றில் அன்பளிப்புச் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில், செலான் வங்கியின் சில்லறை வங்கியியல் பிரிவின் பதில் பொது முகாமையாளர் திலான் விஜயசேகர கருத்துத்தெரிவிக்கையில், “ஒவ்வொரு குழந்தைக்கும் புதிய பாடசாலை தவணை ஆரம்பம் என்பது, புதிய ஆரம்பமாகும். வழமையான பாடசாலை உபகரணங்களுக்கு மேலதிகமாக, தமது கல்வியாண்டை ஆரம்பிப்பதற்கு ஏதேனும் விசேடமான அன்பளிப்பை சிறுவர்கள் எதிர்பார்ப்பார்கள். 

அவர்களின் இந்த எதிர்பார்ப்புகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, இந்த ஆண்டு செலான் டிக்கிரி அன்பளிப்புத் திட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதனூடாகப் பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி, சகல வயதைச்சேர்ந்தவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். 

மேலும், செலான் டிக்கிரி திட்டத்தினூடாகச்  சிறுவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத்திறனில் கவனம் செலுத்தி, நிதிசார் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன.

துரித மாற்றம் மற்றும் தேவைகளைப் புரிந்து கொண்டு, செலான் டிக்கிரி நவீன போக்குகளுக்கமையத் தன்னை மாற்றிய வண்ணமுள்ளதுடன், சிறுவர்களுக்குத் தமது எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள உறுதியான நிதிக் கட்டமைப்பையும் வழங்குகிறது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .