2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செலான் வங்கி அனுசரணையில் வெபினார் தொடர்

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் நிலவும் சூழ்நிலை காரணமாக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக அன்றாட வணிக நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறை (SME) பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு மெதுவாக இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து முயற்சியுடன் செயல்படுகின்றனர்.

முற்போக்கான அறிவுப் பகிர்வு, வளர்ச்சி குறித்த வலுவான விருப்பத்துடன், நாட்டின் மிக வெற்றிகரமான தொழிலதிபர்கள், துறைசார் வல்லுநர்களுடன் இணைந்து, தொடர்ச்சியானதும் பிரத்யேகமானதுமான வெபினார்களை, செலான் வங்கி முன்னெடுத்திருந்தது. இவ் வெபினார்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும், கொவிட்-19 தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில், இலாபங்களை அதிகரிக்க அவர்களின் வணிகக் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் வழிகளை ஆராய்ந்தன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறைக்களுக்கான டிஜிட்டல் உருமாற்ற நடைமுறைகள், ஒரு வர்த்தக நாமத்தை எவ்வாறு வெற்றிகரமாக உருவாக்குவதுடன் அதை முன்னேற்றுவது, வீட்டு அடிப்படையிலான வணிகச் செயற்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது, குறுகிய காலம், நீண்ட காலச் செலவுக் கட்டுப்பாட்டு முறைகள், தயாரிப்புகள், சேவைகளைச் சந்தைப்படுத்துவதற்கான புதிய வழிகள் போன்ற முக்கிய துறைகளில் இந்த வெபினார்கள் தொடர் வெற்றிகரமாகக் கவனம் செலுத்தியது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .