2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

செலான் வங்கி “மீள்பயன்பாட்டுக்கான கழிவுப் பொருட்கள் போட்டி” ஏற்பாடு

S.Sekar   / 2021 மே 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் டிக்கிரி, வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அதிகாரசபை உடன் இணைந்து “மீள்பயன்பாட்டுக்கான கழிவுப் பொருட்கள் போட்டி” என்பதை ஏற்பாடு செய்திருந்தது. இதனூடாக மீள்சுழற்சி மற்றும் சூழல் மீது பொறுப்புணர்வு ஆகியவற்றை சிறுவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் போட்டியாக இது அமைந்திருந்ததுடன், சிறுவர்களுக்கு சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஆக்கத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதாகவும் அமைந்திருந்தது.

அதிகளவு நேசிக்கப்படும் சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் வங்கியின் டிக்கிரி, டிஜிட்டல் கட்டமைப்பினூடாக, சிறுவர்களுக்கு அறிவூட்டுவது, ஈடுபாட்டை பேணுவது மற்றும் ஊக்குவிப்பதற்கு எப்போதும் புத்தாக்கமான வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. இந்தத் திட்டத்தினூடாக, தமது இளம் வாடிக்கையாளர்களுக்கு தம்மைச் சூழவுள்ள விடயங்களை அவதானித்து, பயின்று மற்றும் தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு செலான் எதிர்பார்த்தது. இந்தப் போட்டியின் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படும் சிறுவர்களுக்கு, பெறுமதி வாய்ந்த டிக்கிரி அன்பளிப்புப் பொதிகளை வெற்றியீட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “செலான் டிக்கிரி என்பது சாதாரண சேமிப்புக் கணக்குக்கு அப்பாலானது. சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு அறிவூட்டுவது, ஈடுபாட்டை பேணுவது மற்றும் ஊக்குவிப்பது போன்றவற்றை நாம் உருவாக்குகின்றோம். இது போன்ற இடர்நிலைகளில் தமது சிறுவர்களை ஏதேனும் செயலில் ஈடுபடுத்தி பேணுவதில் பெற்றோர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை கவனத்தில் கொண்டு, ஆண்டு முழுவதிலும் புத்தாக்கமான செயற்பாடுகள் மற்றும் போட்டிகளை எமது அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர். சிறுவர்களை ஊக்குவித்து, அறிவூட்டி மற்றும் ஈடுபாட்டுடன் பேணும் வகையில் ஒவ்வொரு செயற்பாடும் கவனமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெற்றோர் மற்றும் சிறுவர் மத்தியிலும் சிறந்த ஆர்வத்தை நாம் அவதானித்ததுடன், இந்த செயற்பாடுகள் சிறந்த பெறுமதி சேர்ப்பாக அமைந்துள்ளதுடன், நாட்டிலுள்ள அதிகளவு விரும்பப்படும் சிறுவர் சேமிப்புக் கணக்காகவும் அமைந்துள்ளது.” என்றார்.

வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெஹான் கனகரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “வேறொரு கிரகம் எமக்கில்லை என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, மிகவும் கவனமான முறையில் நுகர்வை மேற்கொள்ள வேண்டும். நாம் ஒன்றிணைந்து எமது விரயங்கள் நாம் நாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவனம் செலுத்தி, குறைந்தளவில் கொள்வனவு செய்வதுடன், மீள்சுழற்சி மற்றும் மீள்பாவனை தொடர்பில் அதிகளவு அக்கறை கொள்ள வேண்டும். சிறுவர்களுக்கு கழிவை குறைத்து, மீள்சுழற்சி மற்றும் மீள்பாவனை தொடர்பில் ஊக்குவிக்கும் ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஊக்குவித்து, கட்டமைப்பான வளக்காப்பு முறைகளை அவர்கள் மத்தியில் ஊக்குவிப்பது இந்தப் போட்டியின் பிரதான இலக்காகும்.” என்றார்.

முடக்கநிலை அமுலில் இருந்த காலப்பகுதியில், டிக்கிரி லொக்டவுன் டயரி (Tikiri lockdown diary), டிக்கிரி டிஜிட்டல் அவுருது (Tikiri Digital Avurudu), வெசாக் பத்தும (Vesak Pathuma), டிக்கிரி சாம்ப் (Tikiri Champ), கதை கூறல் மற்றும் பல ஒன்லைன் செயற்பாடுகளினூடாக சிறுவர்கள் மத்தியில்  அதிகளவு ஈடுபாட்டை பேணுவதில் செலான் டிக்கிரி முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .