2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செலான் வங்கி முதல் காலாண்டில் 21% வளர்ச்சியை பதிவு

Editorial   / 2018 ஜூன் 19 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பொருத்தமான சந்தை நிலைவரங்கள் குறைவாகவே காணப்பட்ட சூழ்நிலையிலும் செலான் வங்கி, முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ. 1,053 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் 2018 ஆம் ஆண்டை உறுதிமிக்க விதத்தில் ஆரம்பித்திருக்கின்றது.     

வங்கியின் தேறிய வட்டி எல்லைகள் (NIMs) குறுகலடைந்ததன் விளைவாக, பருமனளவில் ஏற்பட்ட சிறப்பான வளர்ச்சியால், வங்கியின் தேறிய வட்டி வருமானம் 17.21% இனால் அதிகரித்தது. 

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் ரூ. 868 மில்லியனாகப் பதிவு செய்யப்பட்ட வங்கியின் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானத்துடன் ஒப்பிடுகையில் 2018 இன் முதலாம் காலாண்டில் ரூ. 995 மில்லியனாக 14.61% இனால் அதிகரித்திருக்கின்றது. அந்தவகையில், அட்டையுடன் (Card) தொடர்புபட்ட வருமானம், வணிக நிதியுடன் தொடர்புடைய கட்டண வருமானம் மற்றும் பிணையங்கள் மற்றும் பணவனுப்பல்களில் இருந்தான கட்டணங்கள் போன்றவற்றில் இவ்வாறான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள், நிதிக் கருவிகளில் இருந்தான ஆதாயங்கள், அந்நியச் செலாவணியின் ஆதாயங்கள் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் தொழிற்பாட்டு வருமானமானது 2017 இன் முதலாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 238 மில்லியன் தேறிய ஆதாயத்துடன் ஒப்பிடுகையில், 2018 இன் முதலாம் காலாண்டில் ரூ. 366 மில்லியன் தேறிய ஆதாயத்தை பெற்றுள்ளது. 

 பிரத்தியேக மதிப்பிறக்க கட்டணமாகப் பதிவு செய்யப்பட்ட ரூ. 380 மில்லியனானது, ஏற்பாட்டு ஒதுக்கீடுகளால் குறித்துரைக்கப்பட்ட கடன் வெளிப்படுத்தல்களைப் பிரதிபலிப்பதாகக் காணப்படுகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .