2024 மார்ச் 28, வியாழக்கிழமை

செலான் வங்கியிடமிருந்து மெகா ரிவோர்ட்ஸ்

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, வாடிக்கையாளர்களுக்காக செலான் மெகா ரிவோர்ட்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2020ஆம் ஆண்டின் நிச்சயமான வெகுமதிகளின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெகா ரிவோர்ட்ஸ் ஊடாக, வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்பதுடன், ‘செலான் ஷுவர்’, ‘செலான் திலின சயுர’ வெகுமதித் திட்டங்களை பிரதியீடு செய்யும். 

தனிப்பட்ட சேமிப்பு, நடைமுறை கணக்குகள், தனிப்பட்ட வியாபார சேமிப்பு மற்றும் நடைமுறை கணக்குகள், தனிப்பட்ட வெளிநாட்டு நாணய நிலையான வைப்புகள் மற்றும் சேமிப்பு கணக்குகளை ஆரம்பித்து பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வெகுமதித் திட்டம் உரித்தாகும். டிக்கிரி சிறுவர் சேமிப்பு கணக்குகளுக்கும் இந்த வெகுமதி வழங்கப்படும். இந்த வெகுமதித் திட்டத்தினூடாக கணக்குதாரர்களின் வாழ்ககையில் இடம்பெறும் திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் பொது பரீட்சைகளில் சித்தி போன்ற முக்கியமான தருணங்களின் போதும், சத்திர சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்றதன் பின்னரும் வெகுமதிகளை வழங்கப்படும். தகைமை பெறும் சேமிப்பு, வெளிநாட்டு நாணய சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 2 இரவுகள் வரை ஹோட்டல் தங்குமிட வசதிகளை பெற்றுக் கொள்வார்கள். 

வாழ்க்கையின் முக்கியமான தருணங்களின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, செலான் மெகா ரிவோர்ட்ஸ் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு தமது தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள சிறந்த அடித்தளம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. தகைமையை பெறும் புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு ரூ. 100,000 பெறுமதியான பணப்பரிசு வரை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், குழந்தை பெற்றுக் கொள்வோர் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரில் டிக்கிரி கணக்கு ஒன்றினை ரூ. 100,000 வரை வைப்பாக பெறுவார்கள். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்யும் மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான பணப் பரிசுகள் வழங்கப்படுவதுடன், டிக்கிரி கணக்கு வைத்திருப்போர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறும் பட்சத்தில் அவர்களுக்கும் பண வெகுமதி வழங்கப்படும். தகைமைபெறும் கணக்குதாரர் எதிர்பாராதவிதமாக அவசர சத்திர சிகிச்சைக்கு முகங்கொடுக்க நேரிட்டால், செலான் வங்கியிடமிருந்து ரூ. 200,000 வரை செலவுகள் ஈடு செய்யப்படும். 

மேலும், ரூபாய் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தமது கணக்கில் 6 முதல் 12 மாதங்கள் வரையான காலப்பகுதியில் ரூ. 20,000 ஆகக்குறைந்த தொகையாக பேணினால் இந்த வெகுமதி திட்டத்துக்கான தகைமையை பெறுவார்கள். வெளிநாட்டு நாணய கணக்கு வைத்திருப்போரும் இதே காலப்பகுதியில் தமது கணக்கில் 500 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டு நாணய மீதியை பேணினால் இந்த வெகுமதிக்கான தகைமையை பெறுவார்கள்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X