2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சொஃப்ட்லொஜிக் லைஃப் முன்னெடுக்கும் ‘அபி துரு மித்துரு’

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான இலங்கையை வழங்கும் வகையில், சொஃப்ட்லொஜிக் லைஃப் ஒரு இலட்சம் மரங்களை நடும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ‘அபி துரு மித்துரு’ செய‌ற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கை பசுமைச் சூழல் எதிர்நோக்கியுள்ள அபாயகரமான நிலைமையை சரியான நிலைமைக்கு மாற்றுவதும் அது தொடர்பாக இலங்கையரை தெளிவுபடுத்தவும் மேலும் சரியான பாதையில் இலங்கையர்களை நடத்துவதை நோக்கமாகவும் கொண்டு இந்த செயற்றிட்டத்துக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட விதைகள் ஒரு சிறப்பு பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் வனப்பகுதி வேகமாக குறைவடைந்த வருதல், காபன் உமிழ்வானது 43% ஆல் அதிகரித்து வருகின்ற காலகட்டத்தில் சொஃப்ட்லொஜிக் லைஃப் அபி துரு மித்துரு செயற்றிட்டத்தை நீண்டகால திட்டமாக முன்னெடுக்க எதிர்பார்க்கின்றதுடன் அபிவிருத்தி மற்றும் தொழில்மயமாக்கல் மூலம் அழிவடைந்து வரும் பயிர் நிலங்களை மீள கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தும்பு நிரப்பப்பட்ட விசேட பொதியில் இந்த விதை வளரும் என்பதுடன் அது வளரும் பருவம் வரை அது சுதந்திரமாக வளர்வதற்கு இடமளிக்கப்படும். இந்த செயற்றிட்டம் ஊடாக கடலரிப்பு, மண் சரிவு, வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அழிவுகளை எதிர்கொள்ளும் பிரதேசங்கள் முதலில் இனங்காணப்பட்டு அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .