2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனசக்தி இன்சூரன்ஸ் ayubo.life உடன் கைகோர்ப்பு

Editorial   / 2019 ஜூலை 23 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கை முறை, ஆரோக்கியம்,  சுகாதார app ஆன ayubo.life உடன் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி கைகோர்த்து, ‘Live Life’ எனும் புத்தாக்கமானக் காப்புறுதித் தீர்வை வழங்க முன்வந்துள்ளன.

ஆரோக்கியம் அடிப்படையிலான டிஜிட்டல் காப்புறுதித் தீர்வு, உள்நாட்டு காப்புறுதித் துறையில் வழங்கப்படும் இது போன்ற முதலாவது காப்புறுதித் தீர்வாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு பெருமளவு அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும். 

‘Live Life’ ஊடாக வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரையான மாதாந்த தவணைக் கட்டணத்துக்கு, ஐந்து சுகாதார நிலைகளுக்கு பொருத்தமான காப்புறுதி தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்வுக்கு, தம்மைப் பதிவு செய்து கொண்டவுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது ஆரோக்கியம் தொடர்பான அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் தகைமை வாய்ந்த சுகாதார, ஆரோக்கிய நிபுணர்கள் குழுவினரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இதில் physician, dietician, sports scientist ஆகியோர் அடங்கியிருப்பார்கள். 

வாடிக்கையாளர்களுக்கு தமது ஆரோக்கிய நிலையில் கவனம் செலுத்தி, அவற்றில் ஏற்படக்கூடிய இடர் நிலைகளை குறைத்துக் கொள்ளக்கூடிய ஆலோசனைகள் வழங்கப்படும். இடர் காரணிகளை வெற்றிகரமாக காப்புறுதிதாரர் கடந்தவுடன், அடுத்த ஆண்டுக்காக அவர்களுக்கு மேலதிக காப்பீட்டு அனுகூலங்கள், மேம்படுத்தப்பட்ட காப்பீடு போன்றவற்றை நிறுவனம் வெகுமதியாக வழங்கும்.

‘Live Life’ இன் அறிமுகத்துடன், இலங்கையில் மாற்றமடையக் கூடிய அனுகூலங்களைக் காப்புறுதிதாரர்களுக்கு ஆரோக்கிய பழக்கமுறைகள் அடிப்படையில் வெகுமதிகளுடன் வழங்கும் முதலாவதும் ஒரே காப்புறுதி சேவை வழங்குநராக ஜனசக்தி இன்சூரன்ஸ் திகழ்கின்றது.

2016ஆம் ஆண்டில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம், இலங்கையில் ஒரு வருடத்தில் இடம்பெற்ற மொத்த உயிரிழப்புகளில் 83% ஆனவை தொற்றா நோய்கள் (NCDs) காரணமாகவும், இதில் 34% ஆனவை இருதய நோய்கள் காரணமாக ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டிருந்தது.

இது போன்ற இடர்களை கவனத்தில் கொண்டு, ‘Live Life’ எனும் திட்டத்தை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நிபுணர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .