2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் Virtusaக்கு கௌரவம்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

21ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் கணினி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகள் பிரிவில் 2016ஆம் ஆண்டுக்கான “அதிகூடிய அந்நிய செலாவணி ஈட்டுனர்” மற்றும் “அதிகூடிய பெறுமதிசேர் ஏற்றுமதியாளர்” ஆகிய இனங்காணல் அங்கிகாரங்களை Virtusa Corporation பெற்றுள்ளது. 

நாட்டில் ஏற்றுமதி முயற்சிகளுக்கு ஏற்றுமதியாளர்கள் ஆற்றி வருகின்ற பங்களிப்புகளுக்கான உச்ச இனங்காணல் அங்கிகாரமாக ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சரவை உறுப்பினர்கள், மதிப்புக்குரிய அதிதிகள் மற்றும் தொழிற்றுறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

இந்த இனங்காணல் அங்கிகாரத்தை ஏற்று Virtusa நிறுவனத்தின் பிரதம தகவல் அதிகாரியும் பொது முகாமையாளருமான மது ரட்ணாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளை பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த கௌரவமளிக்கின்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் உச்ச ஏற்றுமதியாளர்களுள் ஒன்றாக இனங்காணல் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளமை, எமது திறமைத் தளத்தை விஸ்தரித்து, அதிக பெறுமதி கொண்ட ஏற்றுமதிகளை வளர்ச்சி பெறச் செய்வதன் மூலமாக நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் சிறந்த நற்பலனைத் தோற்றுவிப்பதில் எமது வலுவான அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றது. ஏற்றுமதியில் தொடர்ச்சியாக வெற்றிகரமான பெறுபேறுகளை ஈட்டி வருவது, எமது அணியின் திறமை மீது எமது சர்வதேச வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்று பகருவதுடன், அவர்கள் தமது வர்த்தகங்களை மாற்றத்துக்கு உட்படுத்தி, மீள்கற்பனை செய்வதற்கு உதவும் புத்தாக்கமான தீர்வுகளை விநியோகிக்கும் எமது ஆற்றலையும் காண்பிக்கின்றது” என்று குறிப்பிட்டார். 

கணினி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகள் பிரிவில் மிகச் சிறந்த ஏற்றுமதியாளராக ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் Virtusa இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய், உற்பத்தி மேம்பாடு, சந்தை மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் நிறுவனங்கள் ஆற்றிவருகின்ற பங்களிப்புக்களின் அடிப்படையில் இதற்கான தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் மற்றும் அரச துறை பிரதிநிதிகளைக் கொண்ட நடுவர் குழுவினால் விருதுகளின் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வை 1981ஆம் ஆண்டில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆரம்பித்து வைத்திருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .