2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸில் IFC முதலீடு

Editorial   / 2020 ஜூன் 28 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மாலைதீவுகளில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் வியாபார செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு 175 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய IFC முன்வந்துள்ளது. இலங்கையில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் சுப்பர் மார்க்கெட் தொடரை விஸ்தரிப்பதற்கும், இலங்கை, மாலைதீவுகளில் காணப்படும் ஹோட்டல்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.   

இலங்கையில் IFC பணியாற்ற ஆரம்பித்த 50 வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உயர்ந்த முதலீட்டுத் தொகையாக இது அமைந்துள்ளதுடன், ஒரு தசாப்த காலப்பகுதியின் பின்னர், மாலைதீவுகளில் முதலீடுகளை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் நெகிழ்ச்சித்தன்மை,  திரள்வு நிலையைப் பேணுவதற்கு மேலதிக உதவியாக இந்த நிதித் தொகையை வழங்க முன்வந்துள்ளதாக IFC வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   

அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் சுப்பர்மார்க்கெட், ஹோட்டல் செயற்பாடுகளின் விஸ்தரிப்பினூடாகப் பெருமளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.   

இலங்கை, மாலைதீவுகளுக்கு சுற்றுலாத் துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருமானமீட்டும் துறையாக அமைந்துள்ளமையால், இந்த முதலீட்டினூடாக, நேரடியானதும்  மறைமுகமானதுமான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அந்நியச் செலாவணியையும் ஈட்டிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.   

அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள்  தனது சுப்பர்மார்க்கெட் வலையமைப்புக்குள் 100 புதிய விற்பனையகங்களை இணைத்துக் கொள்ளும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் திட்டத்துக்கு இந்த முதலீடு வலுச்சேர்க்கும். 

குறைந்தளவு அபிவிருத்தியைப் பதிவு செய்துள்ள பகுதிகளுக்கு பிரவேசிப்பதனூடாக, அப்பகுதிகளைச் சேர்ந்த நுண், சிறு மற்றும் நடுத்தரவளவு தொழில்முயற்சியாளர்கள், விவசாயிகளுக்குத் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .