2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸின் கை சுத்திகரிப்பு ஜெல்

Editorial   / 2020 ஜூன் 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ் ஸ்டெரில், சமீபத்தில் கொவிட்-19 க்கு எதிரான செயற்பாடுகளில், உயர்தர கை சுத்திகரிப்புக்கான பொதுமக்கள் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், கை சுத்திகரிப்பு ஜெல்லை, சில்லறைச் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளதாக, நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஜெல் வடிவ சுத்திகரிப்பு, கைகளுக்கு மென்மையானதுடன் ஒலிவ் சாறுகள் கைகளை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த ஜெல்லால், தீங்கு விளைவிக்கும் கிருமிகளில் 99.99% கொல்லப்படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கைச் சுகாதாரம் குறித்த WHO வழிகாட்டுதல்களின்படி, கொவிட்-19 தொற்று என்பது, ஒரு கடுமையான சுவாச நோயாகும். இது அசுத்தமான மேற்பரப்புகளுடன் நேரடித் தொடர்பின் மூலம் பரவுகிறது. இருப்பினும், இரசாயனக் கிருமிநாசினிகளால் வைரஸ் எளிதில் செயலிழந்து விடுகின்றது. ஆகையால், நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மய்யம் (சி.டி.சி) குறைந்தது 60% மதுசாரம் கொண்ட, மதுசாரம் அடிப்படையிலான கைச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது.

அதேநேரத்தில், WHO 70% மதுசார ப்ளீச் பயன்பாடு, மேற்பரப்புகளைத் துடைக்கக் கட்டாயப்படுத்துகிறது. அனைத்துக் காத்திரமான சர்வதேச வழிகாட்டுதல்களின்படி, 'ஸ்டெரில் சானிடைசர்' தயாரிப்புகளில் 70% மதுசாரம் உள்ளது. மேலும், பாதுகாப்புடன் இணக்கத்தையும் உறுதி செய்வதற்காக, இந்த உற்பத்தி தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'ஸ்டெரில் அட்வான்ஸ்ட் ஹான்ட் சானிடைசர் ஜெல்' மருந்தகங்கள், முதற்றர மளிகைக் கடைகள், நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும். அத்துடன், 50, 100, 300 மி.லி அளவுகளில் கிடைக்கின்றது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சந்தையில் இருக்கும் மதுசார ஹான்ட் ரப், சானிட்டைசிங் ஸ்ப்ரே, மேற்பரப்பு சானிடைசர் ஆகியவற்றின் ஐந்து லீற்றர் தொழிற்றுறை கொள்கலன்களும் சானிடைசர் வரம்பில் அடங்கும். தனிப்பட்ட சுத்திகரிப்பு, கிருமிநாசினி சாவடிகள், அறைகள், கவுண்டர் டாப்ஸ், டேப்லெட், நாற்காலிகள் போன்ற மேற்பரப்புகளைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல பயன்பாடுகளை, ஸ்டெரில் உள்ளடக்கியது என, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .