2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டோக்கியோ சீமெந்துடன் Foundation of Goodness கைகோர்ப்பு

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

‌தெற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் வகையில், டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கும் செயற்திட்டத்தில் பங்காளராக இணைந்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் Foundation of Goodness (FoG) அமைப்பு கைச்சாத்திட்டிருந்தது.   

டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness (FOG) ஆகியவற்றுக்கிடையிலான நீண்ட கால ஒன்றிணைவினூடாக, இலாபநோக்கற்ற அமைப்பு தமது சுழியோடல் மற்றும் பயிற்சிப் பிரிவான ‘டைவ் லங்கா, டைச் சீனிகம’ ஊடாக, சீனிகம, ஹிக்கடுவ கரையோரப் பகுதிகளில் காணப்படும் உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, இலங்கை கடற்படை, வனஜீவராசிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு நிதியம் (WRCT), கடல் வளங்கள் நிதியம் (BRT) ஆகியவற்றுடன் Foundation of Goodness கைகோர்த்து டோக்கியோ சீமெந்தினால் முன்னெடுக்கப்படும் பவளப்பாறை பாதுகாப்புத் திட்டத்துக்கு பிரதான பங்களிப்பு வழங்கவுள்ளது.   

டோக்கியோ சீமெந்து நிறுவனம் சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் மேலாக, தமது பிரதான சூழல்சார் நிலைபேறாண்மை நடவடிக்கைகளில் ஒன்றாகப் பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.

இலங்கையின் கரையோரப்பகுதிகளில் காணப்படும் பெருமளவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பவளப்பாறைப் படிமத்தைப் பாதுகாத்து மீளமைப்பது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய பங்காளர்களுடன் நிறுவனம் கைகோர்த்துள்ளது. பவளப்பாறைகள் அழிவடைவதை தவிர்ப்பதற்காக இந்த சூழல்சார் அக்கறை கொண்ட நிறுவனங்கள் தமது நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.  

பவளப் பாறைகளை மீள வளர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் போன்றவற்றை பல்கலைக்கழக மாணவக் குழுக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வ செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த அணி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

இது தொடர்பான ஆய்வுகளுக்கு டோக்கியோ சீமெந்து நிதி வழங்கலை மேற்கொள்வதுடன், நீருக்குள் காணப்படும் பவளப்பாறைகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கு அவசியமான விஞ்ஞான தொழில்நுட்ப சாதனங்களை விநியோகிப்பதுடன், தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளது.

நீண்ட காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பவளப்பாறைகளின் உருவாக்கம்,  அவற்றின் வளர்ச்சி தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்வதை இலக்காகவும் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .