2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தரம் 5 புலமைப்பரிசில் விருதுகளுக்கு இலங்கை வங்கி விண்ணப்பம் கோரல்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கி தனது வருடாந்த ‘ரண் கெகுளு புலமைப்பரிசில் விருதுகள்’ நிகழ்வின் போது 2018ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு செயற்றிட்டங்களில் ஒரு அங்கமாக அமைந்துள்ளதுடன், நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.   

பரீட்சைக்கு முன்னைய தினம் சிறுவரின் ரண் கெகுளு கணக்கில் ஆகக்குறைந்தது 5000 ரூபாய் மீதியை கொண்டிருப்பதனூடாக, இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு குறித்த சிறுவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்த சுமார் 2,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. வங்கியில் ரண் கெகுளு கணக்கை பேணியிருந்த ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் பெறுமதி வாய்ந்த அன்பளிப்பை வழங்க இலங்கை வங்கி திட்டமிட்டுள்ளது.   

இலங்கை வங்கியினால் ஏற்கெனவே முதல் மூன்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 150,000, ரூ. 100,000 மற்றும் ரூ. 75,000 வீதம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

மாதிரி விண்ணப்பம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும். வங்கியின் இணையத்தளத்திலிருந்தும் பக்கத்திலிருந்தும், facebook பக்கத்திலிருந்தும் இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தகைமை பெற்ற ரண் கெகுளு கணக்குதாரர்களை தமது விண்ணப்பங்களை 2018 நவம்பர் 27ஆம் திகதிக்கு முன்னதாக அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையொன்றில் சமர்ப்பிக்குமாறு வங்கி அறிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X