2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொழில் முயற்சியாளர்களுக்கு Good Life X Garage உதவி

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய கால கட்டத்தில் இலங்கையின் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சிகள் அசாதாரணமான வியாபார சூழலில் இயங்குகின்றன. சர்வதேச சந்தைகளில் நிலைத்திருக்கவும், அவற்றை சென்றடையவும் மீளசிந்திப்பது, மீளபுத்தாக்கத்தில் ஈடுபடுவது மற்றும் மீளக் கட்டியெழுப்பும் செயன்முறைகளை அவை மேற்கொள்ள வேண்டும்.

சிறந்த மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக ஒழுக்கமான மற்றும் நிலைபேறான வியாபார சிந்தனைகளை சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை Good Life X (GLX) முன்னெடுக்கின்றது. உணவு, விவசாயம், ஆரோக்கியம், பிரயாணம், வடிவமைப்பு மற்றும் வலு ஆகிய பிரதான துறைகளில் பணியாற்றுவதுடன், இந்த கற்கையினூடாக, புத்தாக்கமான தொழில்நுட்பம், பிரதான மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச சந்தை மதிநுட்பங்களை அணுகுவதற்கான நிபுணத்துவம், சிறந்த அணுகல் ஆகியவற்றை செயற்படுத்தி நிறுவனங்களை மேம்படுத்தி புதிய ஆற்றல்களை எய்த பங்களிப்பு வழங்குகின்றது. 

குறிப்பாக கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமகா, இலங்கையர்களின் தினசரி வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அத்துடன், சர்வதேச சந்தைகளில் வளர்ச்சியை எய்தக்கூடிய வகையில் தம்மை தயார்ப்படுத்தி வருகின்றன.

செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட GLX இன் அங்கமான ‘GLX Garage’ வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சியினூடாக, நிலைபேறான நிறுவனங்களை கட்டியெழுப்ப ஆழமாக தம்மை ஈடுபடுத்தியுள்ள ஸ்தாபக தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்ட எதிர்பார்க்கின்றது.

இந்த சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அமைப்பாக GLX Garage அமைந்துள்ளதுடன், அவற்றின் குறுங்கால மற்றும் நீண்ட கால இலக்குகளை மீளமைத்துக் கொள்ளவும், புத்தாக்கமாக்கிக் கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. இல்லங்களிலும் வெளிநாடுகளிலும் தமது வாடிக்கையாளர் இருப்புகளை விஸ்தரிக்கவும், தமது நிறுவனங்களை மாற்றியமைக்கவும் உதவியாகவும் இது அமைந்துள்ளது.

GoodLife X இன் பணிப்பாளர் ரந்துலா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “GLX ஊடாக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறைக்கு ஆற்றும் பணி உண்மையில் வலிமையூட்டுவதாக அமைந்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் தொற்றுப் பரவல் காணப்பட்ட போதிலும், மீளக் கட்டியெழுப்ப உதவிகளை வழங்குவதாக அமைந்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு புத்தாக்கமான திருப்பத்தை ஏற்படுத்தி, சிறந்த வணிக தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள இந்த நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்க நாம் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக இலங்கையில் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகளை வழங்கி நேரத்தை மீதப்படுத்துவதற்கும் உதவிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

Target Agriculture, House of Lonali, Worga Naturals, Serendipol மற்றும் Ceylon Exports and Trading ஆகிய சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளுக்கு நிலைபேறாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி புதிய சந்தைகளில் பிரவேசிக்க உதவிகள் வழங்கப்படுகின்றன. 

இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு பெருமளவு விண்ணப்பங்களை ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் ஹொங் கொங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்களினால் கடுமையான இனங்காணல் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

GLX Garage இன் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நியோ லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “புதிய பொருளாதார மற்றும் வியாபார கட்டமைப்பில் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் உயர் கட்டமைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இலக்குகள் போன்றன வடிவமைக்கப்பட்டு, வியாபார செம்மையாக்கம், சர்வதேச நிபுணர்கள் மற்றும் பங்காளர்களை அணுகும் வாய்ப்பு, வாடிக்கையாளர் பின்பற்றலை தூண்டுதல் மற்றும் இலக்கு சந்தைகளுடன் இணைப்பை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுப்பார்கள்.”

GLX Garage நிகழ்ச்சியினூடாக சரியான பங்காளர்களை இனங்காண்பது, உரையாடல்களை முன்னெடுக்க உதவுதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் அவர்களை தொடர்புபடுத்தல் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. எதிர்காலத் திட்டமாக, GLX Garage இனால் சர்வதேச ரீதியில் காணப்படும் நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தல் பகுதிகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கான GLX Garage நிகழ்ச்சி என்பது, ஜேர்மனி Noah மையத்தினால் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கான பதிலளிப்பு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்கு German Federal Ministry for Economic Cooperation and Development (BMZ) உதவிகள் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .