2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் INSEE கைகோர்ப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் பிராந்தியத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில்நிலை வழிகாட்டல் நிகழ்வொன்றை இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் INSEE சீமெந்து கைகோர்த்து, ஏற்பாடு செய்திருந்தது. நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள ஆர்வத்துடன் திகழும் முதல் தொகுதி மாணவர்களை தெரிவு செய்யும் நோக்குடன், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தளம், அத்தவில்லுவ, மேதானந்த வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

500 இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியினூடாக தெரிவு செய்யப்பட்டு, மூன்று பிரிவுகளில் 3 ஆண்டு காலப்பகுதிக்கு நடைபெறும் பயிற்சித்திட்டத்தில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன் போது மேசன், நீர்குழாய் பொருத்தல், மரவேலை, இலத்திரனியல், அலுமினியம் ஃபெப்ரிகேஷன் மற்றும் வெல்டிங் போன்ற பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இது 6 மாத காலம் முதல் 1 வருடம் வரை தொழிற்பயிற்சியுடன் முன்னெடுக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பயிற்சிகளின் பின்னர் தொழில் வாய்ப்புகளும் பெற்றுக்கொடுக்கப்படும். INSEE சீமெந்தின் சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக சமூகங்களுக்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், புத்தளம் பிரசேத்தைச் சேர்ந்த தொழில் வாய்ப்புகளின்றி காணப்படும் இளைஞர்களுக்கு சுயதொழிலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு வழங்கப்படுவதுடன், நாட்டின் தொழில் வாய்ப்புகளின்றி காணப்படுவோரின் எண்ணிக்கையை குறைப்பதிலும் பங்களிப்பை வழங்குகிறது.

குறித்த பயிற்சித்திட்டம் மூலம் புத்தாக்கம், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துடன் தொடர்புடைய தொழில்முயற்சியாண்மை தொடர்பான விடயங்கள் போன்ற தலைப்புகள் ஒரு நாள் விரிவுரைகளின் ஊடாக தொழிற்பயிற்சி அதிகார சபையினால் பங்குபற்றுநர்களுக்கு வழங்கப்படும். நிறுவனங்கள், அரச பங்காளர்கள், செயற்திட்ட நிதியிடல் பங்காளர்கள் மற்றும் பொது மக்கள் போன்றவர்களை தொழிற்பயிற்சி இலக்கு வைத்துள்ளது.

தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் (கலாநிதி). லயனல் பின்டோ இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், ‘புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ஆளுமைகளை மேம்படுத்த INSEE சீமெந்து முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. நிறுவனத்தின் உண்மைத்தன்மையை இது தெளிவாக வெளிப்படுத்துவதுடன், பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது’ என்றார்.

INSEE சீமெந்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நந்தன ஏக்கநாயக்க தெரிவிக்கையில், “பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் INSEE சீமெந்து காண்பிக்கும் பல வழிமுறைகளில் இது ஒன்றாக அமைந்துள்ளது. ஒருவழியில் தேசத்துக்கு இது நீண்ட கால அனுகூலங்களை பெற்றுக்கொடுப்பதாக அமைந்திருக்கும். தொழிற்பயிற்சி அதிகார சபையின் பெறுமதி வாய்ந்த பங்களிப்பை நாம் வரவேற்பதுடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வலுவூட்ட அது இன்றியமையாததாக அமைந்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .