2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு தொடர்ந்து CarbonConscious சான்று

Gavitha   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு தனது பங்களிப்பை வழங்கும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் வழங்கப்படும் நிலைபேறான செயற்பாடுகளுக்கு, CarbonConscious சான்று தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் வழங்கப்பட்டிருந்தது. யூனியன் பிளேஸில் அமைந்துள்ள அதன் தலைமையகத்துக்கும், நவம் மாவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கிளைகளுக்கும் இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.  

சிலோன் காபன் கொன்சல்டிங் கம்பனியுடன் (CCC) இணைந்து நிறுவனம் செயலாற்றியிருந்ததுடன், பச்சை இல்ல வாயு வெளியேற்றங்களை மதிப்பிடுவதற்காக சர்வதேச வழிகாட்டல்களைப் பின்பற்றியிருந்தது. இந்த சான்றை சஸ்டெய்னபிள் ஃபியுச்சர் குரூப் வழங்கியிருந்ததுடன், மூன்று ஆண்டுகள் இந்த நிகழ்ச்சி பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதுடன், தெரிவு செய்யப்பட்ட அலுவலகங்களிலிருந்து சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை அளவிட்டு, கட்டுப்படுத்தி குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.  

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரேணுகா பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தீவாக அமைந்துள்ளதுடன், காலநிலை மாற்றம் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மக்களின் மற்றும் வியாபாரங்களின் இன்றைய இலக்குகளை எய்தவும் நாளைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிடவும் உதவும் வங்கி எனும் வகையில், எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் நேர்த்தியான காலநிலை மாற்றத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

எமது காபன் வெளியீட்டை அளவிடுவது தொடர்பில் காபன் கொன்சல்டிங் கம்பனியுடன் நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளினூடாக, எமது காபன் வெளியீட்டை கட்டுப்படுத்தி வருகிறோம். மேலும், இலங்கையை சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான பொருளாதார நாடாக மாற்றியமைப்பதற்கு எமது பொருட்கள் மற்றும் சேவைகளினூடாக நிலைபேறான வாழ்க்கைத்தர மற்றும் முதலீடுகளை நாம் ஊக்குவித்து வருகிறோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .