2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிலைபேறான ஆரம்ப நிலை நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு Good Life X இரண்டாம் கட்ட உதவி

Gavitha   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த GoodLife X (GLX) Accelerator நிகழ்ச்சித்திட்டத்தினூடாக புத்தாக்கமான ஆரம்பநிலை நிறுவனங்கள் மூன்று மாத பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளன. கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட cohort வெற்றிகரமாக நிறைவடைந்தைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டின் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஜுலை மாதம் ஆரம்பமாகிய இரண்டாம் cohort நிகழ்வில், பத்து ஆரம்ப நிலை நிறுவனங்கள் உணவு, பிரயாணம், ஆரோக்கியம் மற்றும் வடிவமைப்பு துறை போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தன. நாட்டில் தொற்றுப் பரவல் நிலவிய சூழலில் மேற்படி பயிற்சி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. 

இவ்வாறு ஆரம்ப நிலை நிறுவனங்களில் BusSeat, Good Folks, Local Forecast, Mindful Travels, Moonshadow Naturals, Olai, Owita Organics, RAW, Sebastco – Wawamu ஆகியன அடங்கியிருந்தன.

GIZ இலங்கையின் சிறிய, நடுத்தரளவு தொழிற்துறை; அபிவிருத்தி செயற்திட்டத்கின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட GLX Accelerator நிகழ்ச்சியினூடாக, ஆரம்ப நிலையிலுள்ள தொழில்முயற்சியாண்மைகளின் ஒழுக்கம் மற்றும் நிலைபேறான தன்மையை கட்டியெழுப்புவதற்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப நிலை நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல், பயிற்சி மற்றும் கல்விச் சேவை வழங்குநர்களுடனான உறுதியான வலையமைப்பை ஏற்படுத்திக் கொள்ளல் மற்றும் அவர்களின் வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு அவசியமான இதர பயனுள்ள வளங்கள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வின் போது, ஆறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமது வியாபார நிலையை கட்டியெழுப்பி, நிலைபேறான வகையில் அவர்களின் நிறுவனத்தினூடாக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இரண்டாவது நிகழ்ச்சித்திட்டத்தில் பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்கள் தொடர்பில் GoodLife X ; பணிப்பாளர் ரந்துலா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “GLX ஊடாக நாம் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதுடன், ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு நிலைபேறான வகையில் இலங்கையின் நலன்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான ஊக்குவிப்புகள் வழங்கப்படும். இந்த ஆண்டின் நிகழ்வில் பங்கேற்ற பங்குபற்றுநர்களின் ஈடுபாடு தொடர்பில் நாம் அதிகளவு மகிழ்ச்சியடைவதுடன், புத்தாக்கமான வியாபாரங்களினூடாக உலகின் நலனில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமென கருதுகின்றோம்.' என்றார்.

12 வார காலம் இடம்பெற்ற இணையவழி பயிற்சியினூடாக, தொழில் முயற்சியாளர்களுக்கு ஆலோசகர்கள், GLX அணி அங்கத்தவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிட்டியிருந்தது. இந்த ஆண்டின் Accelerator இல் பங்குபற்றுநர்களுக்கு பிரதான ஆற்றல்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி, ஆலோசனை, பயிற்சி மற்றும் இலக்கு முகாமைத்துவம் போன்றன அடங்கியிருந்தன.

இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு விசேட அங்கமாக ஜேர்மனியின் பேர்ளின் நகரின், ESCP Business School உடன் பங்காண்மை ஏற்படுத்தப்பட்டிருந்தமையை குறிப்பிட முடியும். ஒவ்வொரு அணியும் ESCP ஆலோசகர் ஒருவருடன் இணைக்கப்பட்டு மூலோபாய சிந்தனை, வழிகாட்டல் மற்றும் ஊக்கமளித்தல் நடவடிக்கைகள் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மனித வளங்கள் முகாமைத்துவம், நிதி, சட்டம், சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாம அடையாளமிடல், நிபுணர்களுடன் தொழில்முயற்சியாளர்களை இணைத்தல் போன்ற தலைப்புகளில் சிந்தனைத்தூண்டல் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

  GLX இன் சமூக பங்காளராக Hatch செயலாற்றியதுடன், தொழில்முயற்சியாண்மை கலாசாரத்தை மேம்படுத்தவும், வினைத்திறனான ஆரம்ப நிலை வியாபார சூழல் கட்டமைப்பை ஏற்படுத்த cohort க்கு வலிமை சேர்த்திருந்தது. 

இலங்கையின் ஆரம்பநிலை வியாபார சூழல் சுயமாக செயலாற்ற ஆரம்பித்துள்ள நிலையில், குறுகிய காலப்பகுதியில் GLX க்கு அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இலங்கையை புத்தாக்கத்தின் மையமாகத் திகழச் செய்வது போன்றவற்றில் பங்களிப்பு வழங்கச் செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .