2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நித்தியகல்யாணி ஜுவலரி 40 வருட பூர்த்தி

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தனது 40 ஆவது ஆண்டுப் பூர்த்தியை அண்மையில் கொண்டாடியது. 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நித்தியகல்யாணி ஜுவலரி பல்வேறு சமூகப் பணிகளைச் செயற்படுத்தி வருகிறது. 

தமது வெள்ளவத்தைக் காட்சியறை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமொன்றை (Drinking Water Dispenser) நிறுவியுள்ளது. வீதியில் பயணிக்கும் பொது மக்களின் தாகம் தீர்க்கும் நோக்கத்தில் மேற்படி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தைக் காலி வீதியில் பொருத்தி உள்ளதோடு, அது எமது சமூகத்தில் முன்னர் இருந்த தண்ணீர்ப் பந்தல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது.

பண்டைய காலத்தில் வீதியில் பயணிப்போர்க்கு தாகம் தீர்க்கும் பொருட்டு, அவ்வாறான தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவப்பட்டிருந்தன. நித்தியகல்யாணி ஜுவலரி நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் நிறுவப்பட்டுள்ள மேற்படி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை, எவ்வேளையிலும் சாதாரண பொது மக்கள் தமது விருப்பம் போல் பாவித்துக் கொள்ள முடியும்.   

உயர் தரத்துடன் கூடிய நவீன வடிவமைப்பிலான ஆபரணங்களை நம்பிக்கையுடன் கொள்வனவு செய்வதற்கு செல்ல வேண்டிய மிகச் சிறந்த இடமாக, மக்கள் மனங்களை வென்றுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியானது, 30,000 இற்கும் மேற்பட்ட உன்னத கண்கவர் ஆபரண வடிவமைப்புகளைத் தன் வசம் கொண்டுள்ளது. உயரிய தரத்தினாலான பிளட்டினம், தங்கம், வெண்தங்கம், இரத்தினம் மற்றும் வைரங்களினாலான ஆபரண உற்பத்திக் கூடத்தையும், உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சி பெற்ற நிபுணத்துவ அறிவைக் கொண்ட அனுபவம் வாய்ந்த ஊழியர்களையும் நித்தியகல்யாணி ஜுவலரி கொண்டுள்ளது.  

CAD, 3D Printing போன்ற புதிய தொழில்நுட்ப செயன்முறைகள் மூலம், வாடிக்கையாளர்களின் எண்ணத்தில் உதிக்கும் படைப்புகளை அதே பொலிவுடன் உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்ட நித்தியகல்யாணி ஜுவலரி நிறுவனமானது, தமது ஆபரண உற்பத்திகளை பிரித்தானியா, டுபாய், கனடா, சுவிட்சலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .