2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூ அந்தனீஸ் பாம்ஸ் விஸ்தரிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தையில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில், நியூ அந்தனீஸ் பார்ம்ஸ், பாரிய விஸ்தரிப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 

இதன் பிரகாரம், நிறுவனத்தின் தயாரிப்புகளை மேம்படுத்தும் வகையிலான திறன்விருத்தி, செயற்பாடுகளில் மேம்படுத்தல் ஆகியன முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பண்ணை விஸ்தரிப்புச் செயற்பாடுகளும் அடங்கியுள்ளன.  

பாதுகாப்பான, பசுமையான, உயர்தரம் வாய்ந்த இறைச்சி வகைகளைச் சந்தையில் வெற்றிகரமாக விநியோகித்துவரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றி, நவீன செயன்முறைகளைப் பின்பற்றி வருவதுடன், துறையில் சிறந்த செயன்முறைகளையும் பின்பற்றுகிறது.  

இலங்கையின் முன்னணி இறைச்சி வகைகள் உற்பத்தியாளர் எனும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இந்நிறுவனம், தன்வசம் உயர் தரமான பண்ணை மற்றும் கால்நடை விருத்திச் செயற்பாடுகளைக் கொண்டுள்ளமை, உயர் தர விலங்கு நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் பதப்படுத்தல் தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சர்வதேச தரங்களுக்கமைய தன்வசம் கொண்டுள்ளது. 

இந்நிறுவனம் பெற்றுள்ள GMP, HACCP மற்றும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தின் ISO தரச்சான்றிதழ்கள் நிறுவனத்தின் செயற்பாடுகளை உறுதி செய்துள்ளன.   

கோழிகளைப் பராமரிப்பது தொடர்பில் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதத்துடனான நியமங்களை இந்நிறுவனம் தெளிவாகப் பேணி வருகிறது. இந்த நியமங்கள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறந்த செயன்முறைகள், நவீன தொழில்நுட்பங்களின் நிறுவுகை, மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் உற்பத்திக்காக புதிய முறைகளை கையாளல் போன்றவற்றினூடாக அவை உறுதி செய்யப்படுகின்றன.நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் சாதனங்கள் பெருமளவில் ஐரோப்பா, பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை.  

நியூ அந்தனீஸ் பார்ம்ஸ் பிரைவட் லிமிட்டெட் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான எமில் ஸ்டான்லி கருத்துத் தெரிவிக்கையில், “எமது, தற்போதைய கோழி குஞ்சுகள் பொரிக்கும் பகுதியிலிருந்து வெளிவரும் ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளின் தரம் மிகவும் உயர்வானதாக அமைந்துள்ளது. எமது பண்ணை, உற்பத்தி, விநியோகத் தொடர் மற்றும் விநியோக செயற்பாடுகள் போன்றன முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படுவதுடன், பாதுகாப்பானதாகவும் தரமானதாகவும் அமைந்துள்ளன. எமது ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், எமது உணவுப் பாதுகாப்பு செயன்முறைகளை மேம்படுத்தும் வகையில் அவர்கள் செயலாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறார்கள்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .